இனி வயிறு உப்பசம் பிரச்சனை வரவே வராது…
வயிறு உப்பசம் அறிகுறி
வயிறானது கனமாகவும், பாரமாகவும் இருப்பது வயிறு உப்பசத்தின் அறிகுறியாகும். வயிறு உப்பசத்தால் வயிற்றில் கடுமையான வலி ஏற்படும். வயிறு உப்பசத்தைப் போக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.
வயிறு உப்பசம் குணமாக
பெருங்காயம்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அதில் பெருங்காயம் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் குணமாகும்.
மோர்
மோரில் இஞ்சி, பெருங்காயம் கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து பின்னர், குடித்து வர வயிறு உப்பசம் குணமாகும்.
புதினா இலை
புதினா இலையைக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர், அதனை அருந்தி வந்தால், வயிறு உப்பசம் குணமாகும். புதினாவைத் துவையலாகவும், தோசையாகவும், சாதமாகவும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.
சீரகம்
தேங்காயை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அத்துடன், சீரகம் மற்றும் பெருங்காயம் கலந்து வாயில் போட்டு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிறு உப்பசம் நீங்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்றாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் பெருங்காயம் கலந்து உருண்டையாக்கி வாயில் போட்டு விழுங்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்தால் வயிறு உப்பசம் நீங்கும்.
இதையும் படிக்கலாமே
மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan