சுவாமி விவேகானந்தா – விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ் -Vivekananda in Tamil
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ் -Vivekananda in Tamil
கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். பெற்றோர் அவருக்கு நரேந்திரன் என பெயர் இட்டனர்.
தினசரி நரேந்திர நாதருக்கு அவர் தாயார் ராமாயண, மகாபாரத கதைகளைச் சொல்வார். ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திரர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரைச் சுய நினைவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் “டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்’ என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.
Vivekananda quotes in tamil
- நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
- உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
- பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது
- கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
- எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.
- வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
- பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
- தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
Vivekananda tamil quotes
உன்னை நீயே பலவீனன் என்று கருதுவது அறிவீனம்!
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்
பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும், கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால். உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது.
லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நாம் இப்போது இப்படி இருக்கும் நிலைக்கு நாம் தான் பொறுப்பு.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். ஆனால் நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. ஆகவே உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
பொன்மொழிகள் விவேகானந்தர் தத்துவம்
விவேகானந்தர் தத்துவங்கள்
விவேகானந்தரின் கல்வி தத்துவங்கள்
இதையும் படிக்கலாமே
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – Abdul kalam history tamil – About abdul kalam in tamil