கறிவேப்பிலையின் மருத்துவக் குணங்கள் – Curry Leaves Benefits in Tamil
Curry Leaves Benefits in Tamil – கறிவேப்பிலை வெறும் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் மட்டும் அன்று. கறிவேப்பிலையில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. கறிவேப்பிலையின் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும்.
கறிவேப்பிலை பயன்கள்
கறிவேப்பிலையைச் சாப்பிட்டில் இருந்து ஒதுக்கி, கீழே போடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. கறிவேப்பிலையின் மருத்துவக்குணங்கள் பற்றி நீங்கள் அறிந்துக்கொண்டால், கறிவேப்பிலையை ஒதுக்கமாட்டீர்கள். கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, நாட்டுக் கறிவேப்பிலை மட்டும் காட்டுக் கறிவேப்பிலை ஆகும். கறிவேப்பிலையின் மருத்துவக்குணத்தைப் பற்றிக் காண்போம்.
karuveppilai benefits in tamil
முடி நன்றாக வளர
கறிவேப்பிலையை உணவில் இருந்து ஒதுக்காமல் சாப்பிட்டு வந்தால், முடி கரு கரு என்று அடர்த்தியாக வளரும். முடிக்கொட்டு பிரச்சனை நீங்கும். உடலானது குளிர்ச்சி பெறும்.
குமட்டல்
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொண்டால், குமட்டல் உணர்வு கட்டுக்குள் வரும். வாந்தியானது கட்டுக்குள் வரும். செரிமானம் நன்றாக நடக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் முழுவதுமாக குணமாகும்.
பார்வைத் தெளிவாக
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வை சார்ந்த கோளாறுகள் நீங்கும். கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல், கண் எரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
இரத்த ஓட்டம் சீராக
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வதன் இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரையும். இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். மன புத்துணர்வாக இருக்கும். உடலானது சுறுசுறுப்பாக இருக்கும்.
வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்வதன் தீராத வயிற்றுப்போக்குக்கூட குணமாகும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே, உணவில் தவறாது கருவேப்பிலையைச் சேர்த்துக்கொள்வதால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி.
சூதக வாய்வு
ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்ளவும்; அதனுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு துகள்களை கலந்து தினமும் இரு வேளை உண்டு வந்தால், நீர் கோவை, பெண்களின் சூதக வாய்வு போன்றவை அகலும். பொடியை தேனுடன் கலந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை பொடி -கருவேப்பிலை பொடி
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். பிறகு மிளகு மற்றும் ஜீராவை தனித்தனியாக வறுக்கவும். வறுத்த சிவப்பு மிளகாயை உலர வைக்கவும். கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும். பருப்பு, மிளகு, ஜீராவை முதலில் காய வைத்து அரைக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்.
கருவேப்பிலை சாதம்
கருவேப்பிலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்
வடித்த சாதம் ஒரு கிண்ணம்
காய்ந்த மிளகாய் ஐந்து
கருவேப்பிலை
தனியா ஒரு தேக்கரண்டி
மிளகு இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு 10
வேர்கடலை பருப்பு தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை சாதம் செய்யும் முறை
மிளகு, கருவேப்பிலை, தனியா, மிளகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்
தனியா,துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றையும் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு காய்ந்த மிளகாய் போட வேண்டும்
பின்பு முந்திரி பருப்பு, வேர்க்கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.
பிறகு கருவேப்பிலை அரைத்த பொடியை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
நன்றாக கெட்டி பதம் வந்த பிறகு அதனை ஆப் செய்ய வேண்டும்
பின்னர் இதனை சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இப்பொழுது சூடான கருவேப்பிலை சாதம் ரெடி
இதையும் படிக்கலாமே
கொத்தமல்லியின் மருத்துவக்குணங்கள் – Kothamalli Benefits in Tamil