வேர்க்குருவா இனி வரவே வராது…Verkuru
வெயில் காலம் வந்தாலே பலரும் வேர்க்குருவால் அவதிப்படுவர். வேர்க்குருவிலிருந்து தப்பிக்கக்கூடிய எளிமையான வழியைக் காண்போம்.
வேப்பிலை
வேப்பிலையை நன்றாக அரைத்து, அதனை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி, ஊறிய பின்னர் குளித்தால் வேர்க்குருவில் உள்ள கிருமிகள் அழியும். வேர்க்குருவும் குணமாகும்.
அருகம்புல்
அருகம்புல்லை நன்றாக அரைத்து, அதனுடன் மஞ்சள் கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் பூசினால் வேர்க்குரு குணமாகும்.
சந்தனப்பொடி
சந்தனப்பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து, வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால், வேர்க்குரு குணமாகும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி, அதனை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் வேர்க்குரு குணமாகும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை நன்றாக அரைத்து, அதனுடன் சந்தனம் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து வேர்க்குருவின் மீது தடவினால் வேர்க்குரு குணமாகும்.