புதினா சட்னி,புதினா துவையல்,புதினா சாதம் – Pudina Benefits
புதினா சட்னி,புதினா துவையல்,புதினா சாதம் – Pudina Benefits
Pudina Benefits- புதினா துவையல், புதினா சட்னி,புதினா தோசை, புதினா சாதம் என்று பல வகையாக உணவுக்கு புதினாவை பயன்படுத்தலாம். புதினா வெறும் வாசத்திற்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருள் கிடையாது. புதினாவில் பலவகையான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
புதினாவின் மருத்துவ குணங்கள்…
மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள்
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
வாய் துர்நாற்றம்
புதினா இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கும். புதினா இலைகளைச் சாப்பிட்டு வந்தால், வாயில் உள்ள நச்சுகள் வெளியேறும். பல் வலியும் குணமாகும்.
தலைவலி
புதினா இலைகளை அரைத்து, நெற்றியில் வைத்து பற்றுப் போட்டால், தலைவலி குணமாகும்.
புதினா எண்ணெயை உடம்பில் வலி உள்ள இடத்தில் தடவி வந்தால், வலியானது குணமாகும். புதினா எண்ணெயைத் தலையில் தடவி வந்தால், ஒற்றை தலைவலி குணமாகும்.
வாந்தி
புதினா இலைகளை சிறிதளவு எடுத்து நசுக்கி, முகர்ந்தால் வாந்தி உணர்வானது கட்டுக்குள் வரும்.
வயிற்றுப்போக்கு
புதினாவை சமைத்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகும்.
ஆஸ்துமா
புதினா இலைகளைப் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
செரிமானக் கோளாறு
புதினாவைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானக் கோளாறு நீங்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
புதினா சட்னி
புதினா சட்னி பலவிதமாக தயாரிக்கலாம், இந்த செய்முறையில் புதினா, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்தேன். தேங்காய், சிவப்பு / பச்சை மிளகாய் கொண்டும் புதினா சட்னி தயாரிக்கலாம். புதினா, உளுத்தம் பருப்பு, மற்றும் வரமிளகாயை வறுத்து. புளி மற்றும் உப்பு சேர்த்து அரைப்பது மற்றொரு முறையாகும்.
pudina sadam
புதினா பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தேங்காய் ஆகியவற்றை அரைத்து வதக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றுடன் சேர்த்து ஊற வைத்த பாசுமதி அரிசி சேர்த்து 3 விசில் வைத்து வேக வைக்கலாம்.
புதினாவை துவையல்
புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும். புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும்.
புதினா தொக்கு
புதினா மற்றும் கொத்தமல்லியை சுத்தம் செய்துகொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து புதினா மற்றும் கொத்தமல்லியை சுருங்க வதக்கிக்கொள்ளுங்கள். அதை சூடு குறைய காற்றாட விடுங்கள். சூடு தணிந்ததும் மிக்ஸியில் காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதோடு வதக்கிய புதினா சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அதை மைய அரைத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த புதினாவை அதில் சேர்த்து நன்கு வதக்குங்கள். அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். 5 நிமிடங்கள் வதங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் புதினா தொக்கு தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்து 3 நாட்களுக்குக் கூட சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே
வயிறு உப்பசம் உங்களை நெருங்கவே நெருங்காது இந்த தூதுவேளை செடியால் -Thuthuvalai Benefits in Tamil
புதினா சட்னி,புதினா துவையல்,புதினா சாதம் – Pudina Benefits Read More »