இயற்கை கவிதைகள் – Iyarkai kavithai in tamil
விலகி நில்
மற்றவர்களின் இயலாமையைப் பார்த்து
கேலி செய்யாதே!
முடிந்தவரை உதவி செய்முடியாத பஞ்சத்தில் விலகி நில்…
வியாபாரம்
வியாபாரி தான் விளைவித்த
காய்கறிகளை விற்று,
வறுமையைப் போக்க நினைத்தான்…
ஆனால், வந்தவர் என்னவோ
விவசாயின் வறுமையைப்
பயன்படுத்தி நிலத்தைப்
பெற்றுக்கொண்டனர்…
வன்முறை
தலைமுறை தலைமுறையாய்
தொடரும் வன்முறை…
இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கம் இடையே…
இல்லாதவன் ஒரு வேளை சோற்றுகாக போராடுகிறான்…
இருப்பவன் பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்க்க போராடுகிறான்…
அடுத்த நொடி, அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த வருடம் நிலையில்லாதவைகள்…
நிலையில்லா வாழ்க்கை நமது,
நிரந்தரமாக சொத்து சேர்க்கிறோம் நமது பெயரில்…
நிலங்கள் இருக்கும் நிரந்தரமாக…நாம், நமது நிலை ?
வறுமை
பிறர் உண்ண நெற்பயிரைப் படைத்தான் உழவன்…
உழவன் பசியாற தானியம் இல்லை…
பிறர் உடுத்த ஆடையை உருவாக்கினான் நெசவாளன்…
நெசவாளன் உடுத்த நல்ல ஆடை இல்லை…
பிறர் வாழ வீட்டைக் கட்டினான் கட்டிடத் தொழிலாளி…
கட்டிடத் தொழிலாளி வாழ வீடு இல்லை …
அடிப்படைத் தேவைகளே கேள்வி குறியாகும் வேளையில்…
சட்டத்திட்டங்கள் அனைத்தும் வறுமையில் வாடும் மக்களுக்காக படைக்கப்பட்டதா?
வழியில்லை
குலை தள்ளிய வாழைமரங்கள்
வீட்டின முன்பு,
மேளத் தாள ஓசைகள் வீட்டின்
உள்ளே!
அறுசுவை உணவின் வாசம்
வீதியெங்கும்…
நான்கு, ஐந்து வீடுகளில் கல்யாணம்…
மிதமிஞ்சிய சாப்பாடுகள்…
நாய்களுக்கு அங்குமிங்கும் ஓட்டம்…
ஏழைகளுக்கோ சாப்பி் வழியில்லை…
கல்யாணக்காரர்களுக்கோ கொடுக்க மனமில்லை…
வருத்தம்
பிறர் வறுமையில் வாடுவதைக்
கண்டு வருந்துவதைவிட,
பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டு,
வருந்துபவரே அதிகம் இவ்வுலகில்…
வராத ஆறு
வராத ஆறு
வற்றிய ஆறு
வாடிய பயிர்
வாடாத மனம்
என்று மாறும் இந்நிலை…
யாரால்?
தமிழ்மொழியால் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்களா?
தமிழர்களால் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டு
இருக்கிறதா?
கால வெள்ளத்தில் பல மொழிகள் மறைய…
காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி!
காலந்தோறும் தமிழ் வரிவடிவத்தில் மாற்றம்!
எட்டாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாம்…
பதினொன்றாம் நூற்றாண்டில் தமிழெழுத்தாம்…
கடைச்சங்கத்தில் கண்ணெழுத்தாம்,
அதைத்தொடர்ந்து தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தமாம்…
காலத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியைப் புதுப்பித்தவர்கள் நம் முன்னோர்கள்…
தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் உள்ள உறவு யாதென்றால்…
வானுக்கும் நிலவுக்கும் உள்ளத் தொடர்பை போன்றது… ஒளிக் கொடுத்து இருளை அகற்றும் மதியைப் போன்றது நம் மொழி…
யாம் பெற்ற இன்பம்
யாம் பெற்ற இன்பம் பெறுக!
இவ்வையம் என்பது பழமொழி…
யாம் பெறாத கல்வியைப் பெறுக
இவ்வையம் என்பது காமராசரின் பொன்மொழி…..
முத்தமிழ்
இயல், இசை, நாடகம் என முத்தமிழைக் கொண்டது
நம் தாய்மொழி…
கற்றோர் புரிந்துகொள்ளும் இயற்றமிழ்…
செவியை உடையோர் அறிந்துக்கொள்வது இசைத்தமிழ்…
பாமரரும் அறிந்துகொள்வது நாடகத்தமிழ்…
நாடகத்தமிழாய் பிறந்து,
இசைத்தமிழாய் வளர்ந்து,
இயற்றமிழாய் செம்மை அடைந்து,
இன்று கணினி தமிழாய் வலம் வரும் தாய்மொழியே! உனக்கு என்றும் மூப்பே கிடையாது…
முதியோர் இல்லம்
நாம் குழந்தைகளாக இருந்தபோது நம்மைப்
பார்த்து பார்த்து வளர்த்தவர்கள்…
பசியால் அழும்போது நமது பசியைப் போக்கியவர்கள்..
உடல்நிலை சரியில்லாதப் போது நம்மை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று ஓடியவர்கள்…
பள்ளயில் சேர்ப்பதற்கு வரிசையில் நின்றவர்கள்…
நமக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக…
தங்களது தேவைகளைக் குறைத்துக்கொண்டவர்கள்…
நமக்கு சிறகு முளைத்து , நமது சொந்தகாலில் நின்றவுடன் நாம் மெதுவாக அவர்களைவிட்டு விலகுவதும்…
பின்பு நமக்கான குடும்பங்கள் அமைந்தவுடன் அவர்களை மறப்பதும் ஏன்?
நம்மைச் சுமந்தவர்கள் நமக்கு சுமையாக மாறுவார்களோ?
இல்லை…
அவர்கள் நமது சுமையைக் குறைக்கக்கூடியவர்கள்…
பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி…
முதியோர் வாழக்கூடிய இல்லமாக நம் இல்லத்தை
மாற்றுவோம்…
அவர்களிடம் நாம் பெற்ற அன்புகடனை முழுவதுமாக
அவர்களிடம் செலுத்துவோம்…
வட்டியும் முதலுமாக ஆயுள்வரை…
முடியாதவை
வானுக்கு முடிவு என்பதே கிடையாது…
மண்ணுக்கு முடிவு என்பதே கிடையாது…
கடலுக்கு முடிவு என்பதே கிடையாது…
தாய்மொழியின் சொல் வளத்திற்கு முடிவு என்பதே கிடையாது…
மலரும் மணமும்
பூவின் மனம் ஊரெங்கும் வீசும்
பூவை விரும்பாதவர் யாரும் இல்லை
பிறருக்காக வாழ்ந்து மடிபவர்களில்
நீயும் சேர்கிறாய் மலரே!
அனைவருக்கும் இன்பத்தைச் சேர்த்த
உன் வாழ்வு ஓரே நாளில் முடிகிறதே!
அழகாகப் பூத்துக் குலுங்கி இறைவனின்
அடியைச் சேர்கிறாய்!
உன்போல்
உயர்ந்த வாழ்வு இங்கு யாருக்குக் கிடைக்கும் சொல் மலரே!
மரம்
பறவைகளின் உறைவிடமே!
பயணிகளின் நிழலிடமே!
விலங்குகளின் உணவாதாரமே!
பசிப்போர்க்கு இனிய பழத்தைத்
தரும் அமுதசுரபியே!
மெல்லிய தென்றல் உன்னிடம்
இரகசியம் சொல்லியதா!
அதைக் கேட்டவுடன்
சலசலவெனச் சிரிக்கிறாய்– உன்
சிரிப்பால் எங்களின் கவலை தீர்ந்தது…
நீ நிலத்துக்குக் குழந்தை
நீ காற்றுக்குத் தோழி
நீ மழைக்குத் தாய்
நீ எங்களின் இன்பத்தின் விளைநிலம்…
மண்ணுலகில் பிரம்மன்
உயிர்களைப் படைப்பவன் பிரம்மன்
என்றால்…
பயிர்களைப் படைக்கும் விவசாயியும்
பிரம்மனே…
ஆ. கீர்த்திகா., M.A.,M.phil.,N.E.T.,