கனவுகளின் பலன்கள் -கனவு பலன்கள் – kanavu palangal in tamil

கனவுகளின் பலன்கள்

கனவு பலன்கள் – கனவுகளின் பலன்கள்

மாமியார் உங்கள் கனவில் வந்தால்

மாமியார் உங்கள் கனவில் வந்தால், பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

மாமனார் உங்கள் கனவில் வந்தால்

மாமனார் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.

அழகிய பெண்ணை கனவில் கண்டால்

அழகிய பெண்ணை கனவில் கண்டால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதை குறிக்கிறது.

அழகிய பெண் மங்களப் பொருளுடன் வீட்டில் நுழைவது போல கனவு கண்டால்

அழகிய பெண் மங்களப் பொருளுடன் வீட்டில் நுழைவது போல கனவு கண்டால், வீட்டில் உள்ள பெண்கள் பருவமடைய போகிறாள் என்று அர்த்தம். வீட்டில் உள்ள கன்னிப் பெண்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் கைகூட வாய்ப்புள்ளது.

உங்கள் உடம்பில் இருந்து ரத்தம் வருவது போல கனவு கண்டால்

உங்கள் உடம்பில் இருந்து ரத்தம் வருவது போல கனவு கண்டால், உங்களுக்கு புகழும், தன லாபம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் உடம்பில் காயத்தில் கட்டு போட்டு இருப்பது போல கனவு கண்டால்

உங்கள் உடம்பில் காயத்தில் கட்டு போட்டு இருப்பது போல கனவு கண்டால், ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.

குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால்

குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், உங்களுக்கு நற்பெயரும் வெற்றியும் கிடைக்கும்.

குளம் வறண்டு இருப்பது போல கனவு கண்டால்

குளம் வறண்டு இருப்பது போல கனவு கண்டால், காரியத்தில் தடைகள் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால்

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால், நீங்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

இறந்தவர்கள் பேசுவது போல கனவு கண்டால்

இறந்தவர்கள் பேசுவது போல கனவு கண்டால், இக்கட்டான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும்.

நாமே இறப்பது போல கனவு கண்டால்

நாமே இறப்பது போல கனவு கண்டால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

இறந்தவர்களை தூக்கி செல்வது போல கனவு கண்டால்

இறந்தவர்களை தூக்கி செல்வது போல கனவு கண்டால், நன்மை உண்டாகும்.

இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால்

இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். பாவங்கள் அனைத்தும் விலகும்.

இறைவனை கனவில் கண்டால்

இறைவனை கனவில் கண்டால், பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நல்ல வேலை கிடைக்கும். திருமண தடை நீங்கும்

அதிகாலை கனவு கண்டால்

அதிகாலை கனவு கண்டால் அது பலிக்கும் என நம்பப்படுகிறது.

கனவில் ஆமையை கண்டால்

கனவில் ஆமையை கண்டால் நமக்கு அதிர்ஷ்டமானது வரப்போகிறது என்று அர்த்தம்.

கனவில் இரும்பை கண்டால்

கனவில் இரும்பை கண்டால் நமக்கு துன்பங்கள் நேர போகிறது என்று அர்த்தம்.

கனவில் ஆப்பிளை கண்டால்

கனவில் ஆப்பிளை கண்டால் நமக்கு வாழ்க்கையில் பல வகையான வெற்றிகளை கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

கனவில் உப்பை கண்டால்

கனவில் உப்பை கண்டால் நமக்கு செல்வமானது பெருகும் என்று நம்பப்படுகிறது.

கனவில் வெள்ளியை கண்டால்

கனவில் வெள்ளியை கண்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சை மரம், விறகு முதலியவற்றை கண்டால்

கனவில் பன்றி, பூ, பெண்கள், ஆடு, பச்சை மரம், விறகு முதலியவற்றை கண்டால் நமக்கு துன்பமானது நிகழும்.

எழுதிக் கொண்டிருப்பதாக கனவு கண்டால்

எழுதிக் கொண்டிருப்பதாக கனவு கண்டால் நமக்கு நல்ல செய்தியானது கிடைக்கும்.

ஏர் உழுவதைப் போல கனவு கண்டால்

ஏர் உழுவதைப் போல கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாக நடக்கும்.

கிணற்றில் நீந்துவதாக கனவு கண்டால்

கிணற்றில் நீந்துவதாக கனவு கண்டால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

சிறை சாலையில் இருப்பது போல கனவு கண்டால்

சிறை சாலையில் இருப்பது போல கனவு கண்டால் பேரும் புகழும் கிடைக்கும்.

மணியோசை கனவில் கண்டால்

மணியோசை கனவில் கண்டால் திருமணம் ஆனது விரைவில் நடக்கும்.

சூரியன் உதயமாவதாக கனவு கண்டால்

சூரியன் உதயமாவதாக கனவு கண்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

தேர்வு எழுதுவதாக கனவு கண்டால்

தேர்வு எழுதுவதாக கனவு கண்டால் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

தேங்காய் உடைப்பது போன்ற கனவு கண்டால்

தேங்காய் உடைப்பது போன்ற கனவு கண்டால் நமக்கு தீமை விளையும் என்று நம்பப்படுகிறது.

மரப்பெட்டி உடைவது போல கனவு கண்டால்

மரப்பெட்டி உடைவது போல கனவு கண்டால் நமக்கு தீமை விளையும் என்று நம்பப்படுகிறது

இதையும் படிக்கலாமே

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top