தலைவலிக்கு உடனடி தீர்வு – தீராத தலைவலி நீங்க- ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம் -Headache in Tamil

ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

Headache- தலைவலியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தலைவலி வருவதற்கான, காரணத்தை அறிந்து, முறையாக செயல்பட்டால் தலைவலியைக் குணப்படுத்தலாம். தலைவலி வருவதற்கானக் காரணத்தையும், அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் காண்போம்.

தலைவலி வருவதற்கான காரணங்கள்

தலையைச் சரியாக துவட்டாமல் இருத்தல், மழை மற்றும் பனிக்காலங்களில் தலையை மூடாமல் பயணித்தல், வெயிலில் அலைதல், சரியாக தண்ணீர் குடிக்காமல் இருத்தல், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், மன அழுத்தம், சரியாக உறங்கமால் இருத்தல் போன்ற காரணங்களால் தலைவலியானது ஏற்படுகிறது.

தலைவலி அறிகுறிகள்

தலையில் நீர் கோர்த்தல் அதன் வழியாக மூக்கடைப்பு, தலை பாரம், இருமல், சளித்தொல்லை போன்ற பல பிரச்சனைகள் தோன்றும். எனவே, தலையை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம் – Thalaivali treatment tamil

முட்டைக்கோஸ் இலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வரவும். இவ்வாறு, செய்வதால் தலைவலி குணமாகும்.

சுக்கை அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வரவும். இவ்வாறு, செய்வதால் விரைவில் தலைவலி குணமாகும்.

உருளைக்கிழங்கை நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வரவும். இவ்வாறு, செய்வதால் விரைவில் தலைவலி குணமாகும்.

இஞ்சியை நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வரவும். இவ்வாறு, செய்வதால் விரைவில் தலைவலி குணமாகும்.

துளசி இலையைச் சேகரித்துக்கொள்ளவும். அத்துடன், இலவங்கம் மற்றும் சுக்கைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதனை, நெற்றியில் பற்று போட்டு வரவும். இவ்வாறு, செய்வதால் விரைவில் தலைவலி குணமாகும்.

வெற்றிலை இலையைச் சேகரித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர், வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இதில், கற்பூரத்தைக் கலந்துக்கொள்ளவும். இவ்வாறு, செய்வதால் விரைவில் தலைவலி குணமாகும்.

வெந்நீரில் துளசி மற்றும் வேப்பிலை போட்டுக்கொள்ளவும். பின்னர், இதில் ஆவிப்பிடித்தால் விரைவில் தலைவலி குணமாகும்.

இஞ்சியை நன்றாக தோல் சீவிக்கொள்ளவும். பின்னர், அதனை அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை வடிகட்டிக்கொள்ளவும். பிறகு, வெந்நீரில் கலந்துக்கொள்ளவும். அத்துடன், எலுமிச்சை சாறைக் கலந்துக் குடித்து வந்தால், தலைவலி குணமாகும்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைப்பட்டால், சிலருக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கணினி மற்றும் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தலைவலிக்கு உடனடி தீர்வு

தலை வலிக்கான சிறந்த நிவாரணியாக துளசி டீ கருதப்படுகிறது. உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த எளிய வீட்டு நிவாரண முறையை பின்பற்றி பாருங்கள். தலைவலி குணமாகும்.

ஆப்பிளை வெறுமென மென்று சாப்பிடாமல், அறுத்த ஆப்பிளில் அதன் மேல் உப்பு கொஞ்சமாக தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும். தலைவலி குணமாகும்.

பின் தலை வலி காரணம்

பின் தலையில் அடிபட்டிருந்தால்பின் தலையில் வலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலியாலும் இப்படி பின் தலையில் வலி  ஏற்படலாம் (Migraine headache). பின்பகுதி ரத்தநாள அழற்சி பாதிப்புகளால் பின் தலையில் வலி  ஏற்படலாம்.

தலை நரம்பு வலி குணமாக

செரிமானக் கோளாறுகளாலும் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும். தலை நரம்பு வலி குணமாக சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவை சிறந்த மருந்துகள். இவற்றில் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் குடித்தால் தலை நரம்பு வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

இதையும் படிக்கலாமே

தலையில் நீர் கோர்த்தல் குணமாக சில டிப்ஸ் -Thalaiyil neer korthal

சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள்- Sangu Poo Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top