இனி இதயம் சார்ந்த நோயால் கவலைப்படத் தேவையில்லை-Heart problem

இதயம்

Heart problem- இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள நாம் செய்யவேண்டியது என்ன? இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க முடியும்.

இதய நோய் வருவதற்கான காரணம்

இதயத்தில் இரத்தம் உறைதலும், இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருப்பதும், ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதும் இதய நோய் வருவதற்கான காரணம் ஆகும்.

உடல் சோர்வாக இருத்தல், உடல் பலவீனம், இதயம் வேகமாக துடித்தல் ஆகியவை இதய நோயின் அறிகுறியாகும். நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இதயம் பலவீனம் அடைந்ததன் அறிகுறியாகும்.

இதய படபடப்பு

இதய படபடப்பு என்றால் என்ன? என குழம்பும் மக்களே இதயமானது ஒழுங்கற்ற முறையில் எதிர்பராத வேகத்தில் துடிப்பது இதய படபடப்பு ஆகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக சாப்பிட வேண்டும். மாதுளை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களையும், கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக்கீரை முதலிய கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமானதாகும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.இனிப்பு பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உப்பை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நொறுக்குத்தீனிகளை  அறவே தவிர்க்க வேண்டும்.

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதயத்தைப் பலப்படுத்தக்கூடிய வகையில் எளிதான உடற்பயிற்சியைச் செய்வது அவசியம். காலையில் எழுந்தவுடன், தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும்.

இதையும் படிக்கலாமே-

உடற்பயிற்சி அவசியம்-Excercise benefits

Share this post

1 thought on “இனி இதயம் சார்ந்த நோயால் கவலைப்படத் தேவையில்லை-Heart problem”

  1. Pingback: உடற்பயிற்சி அவசியம்-Excercise benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top