கந்தர் அனுபூதி வரிகள் – கந்தர் அநுபூதி- Kandar Anuboothi Tamil Lyrics
கந்தர் அனுபூதி நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. “அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப்பாடல்களுமே “நிலைமண்டில ஆசிரியப்பா” வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரி நாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.
கந்தர் அனுபூதி lyrics
காப்பு
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
கந்தர் அனுபூதி பாடல் வரிகள்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. (1)
உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. (3)
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. (4)
மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. (5)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. (8)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல, நிர்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)
கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. (11)
செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் சும்மா இரு, சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. (13)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. (15)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. (16)
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற, வேலவர் தந்ததனால் பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர், நடவீர் இனியே. (17)
இந்து கடவுளில் அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வம் முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானுக்கு என மூன்று விரதங்கள் முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. அவை வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் என்பதாகும். செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது வார விரதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது நட்சத்திர விரதம், சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது திதி விரதம் எனப்படும். இதில் தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் மகத்தான பல நன்மைகள் நடக்கும்.
சஷ்டி விரதம் :
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
தேய்பிறை சஷ்டி ஏன் முருகனுக்கு உகந்தது?
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. தேய்பிறை சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
sashti viratham
இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால்முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
வீட்டில் வழிபடும் முறை :
முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை சஷ்டி அன்று காலை குளித்து விட்டு சுவாமி படத்திற்கு மாலை அல்லது பூக்கள் அணிவித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, பால், பழம் நெய்வேத்தியம் செய்து கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம்பாராயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம். அவல் நெய்வேத்தியம் படைக்க மிகவும் நல்லது. இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும். நாள் முழுவதும் மாமிசம் உண்ணக்கூடாது. எந்தவொரு விவாதமும் செய்யக்கூடாது. அன்றைய தினம் முழுவதும் மௌனவிரதம் இருப்பதால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
சஷ்டி விரதம் உணவு முறை
குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
முருகன் ரகசிய மந்திரம் – சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்
முருகன் ரகசிய மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளால் எழுதப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம் பெற்றுள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்பவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம் என கூறப்படுகிறது. எம பயமும் நீங்குகிறது. அதோடு ஒளிச்சுடராய் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு இந்த மந்திரம் உதவுகிறது. எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றித் தருகிறது இந்த மூல மந்திரம்.
இந்த மூல மந்திரத்தை கோடி முறை ஜெபித்தால் ஈடு இணையற்ற சக்தியைப் பெறலாம் என கூறப்படுகிறது. கடும் தவத்தின் வாயிலாக சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த வேத சூட்சும ரகசியங்களை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அந்த ரகசியங்களை முருகப்பெருமானே ஜோதி வடிவில் தோன்றி நமக்கு கற்பிப்பார் என்பது ஐதீகம். எத்தனை முறை இந்த மந்திரத்தை ஜெபிக்க முடியுமோ ஜெபித்து முருகப்பெருமான மனதார வணங்கினால் அவரது அருளாசிகளைப் பெறலாம்.
ஷண்முக சடாட்சரம் – ஷட் என்றால் ஆறு – ஆறுமுகப் பெருமானின் சரஹனபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் ஜெபத்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும். 1. சரஹணபவ என தொடர்ந்து ஜபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும 2. ரஹணபவச என தொடர்ந்து ஜபித்து வர செல்வம் செல்வாக்கு பெறகும் 3. ஹணபவசர என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும். 4. ணபவசரஹ என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும். 5. பவசரஹண என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் நம்மை அவிரும்பும் 6. வசரஹணப என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும்
தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.
முருகன் மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே
பாடல்-30
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே
திருப்புகழ் பாடல்கள் with lyrics
பாடல்-31
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே
பாடல்-32
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும் இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே
பாடல்-45
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய்
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில்
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே
பாடல்-50
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே
திருமண திருப்புகழ் பாடல் வரிகள் -திருமண தடை நீக்கும் திருப்புகழ் பாடல்
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்துகுறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்தமதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்தஅதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல்களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
லைவா யுகந்தபெருமாளே
ஜோதிட படி, குடும்ப ஸ்தானமோ, களஸ்திர ஸ்தானமோ, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டோ அல்லது அவற்றின் அமர்வினால் கெட்டு போய் இருந்தாலோ, சுக்கிரன் நீச்சம் மற்றும் குடும்ப ஸ்தான அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருந்தோலோ,நாக தோஷம் , களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் ஏற்பட்டு திருமண பொருத்தம் மற்றும் சரியான வரன் அமையாமல் திருமண தடை இருக்கலாம்.
இப்படி எந்த விதமான தோஷம் இருந்தாலும், அவற்றை நீக்கி திருமணம் விரைவில் நடைபெற உதவும் மந்திர சக்தி நிறைத்த பாடல், அருணகிரி நாதரால் பாடப்பெற்ற திருச்செந்தூர் திருப்புகழ் ஆகும். இந்த பாடல் திருமுருக கிருபானந்த வாரியாரால் சிபாரிசு செய்ய பட்டு நிறைய பேர் பலனடைந்துள்ளனர். இப்பாடலை முருகனை வேண்டி தினமும் ஆறு முறை என 48 நாட்கள் படித்து வந்தால், விரைவில் திருமணம் நடைபெறும். அவர்கள் வீட்டில் திருமண மேளம் கொட்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அமைய போகும் கணவனோ, மனைவியோ மிக சிறந்த பரிசாக அமையும் என்பது உண்மை ஆகும்.
குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் -Kula deivam kovil
குலதெய்வம் வழிபட உகந்த நாள்
பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள் பெளர்ணமி . ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.
குலதெய்வம் வழிபடும் முறை
வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி, வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும்
குலதெய்வ வழிபாடு வீட்டில் செய்வது எப்படி?
நாம் தினமும் குலதெய்வத்தை வணங்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும். குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நம்மால் முடிந்த அளவுக்கு குலதெய்வக் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ய வேண்டும்.
குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வத்தின் பெயரை தினந்தோறும் உச்சரிக்க வேண்டும். இப்படி குலதெய்வத்தை பெண்கள் மட்டும் தான் நினைவு கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே தினமும் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், நல்லபடியாக அந்த நாள் செல்லும்.
அமாவாசை குலதெய்வ வழிபாடு
குலதெய்வ அருள் பெறவும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அமாவாசை நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி பெறுவது, குல தெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.
குலதெய்வம் என்பது உங்கள் முன்னோர்கள் வழிபட்ட குடும்ப தெய்வங்களாகும். அவைகளை அம்மாவாசை பௌர்ணமி நாள்களில் வழிபாடு செய்வது எந்த தவறும் இல்லை.
ஆகையினால் நீங்கள் யாருடைய சொற்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உங்கள் மன அமைதிக்காக உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று சாத்வீகமான முறையில் நெய்விளக்கு ஏற்றி.
உங்களால் முடிந்த வகையில் பொங்கல் சுண்டல் வடை அப்பம் தேங்காய் பழம் தாம்பூலம் இவைகளை ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து வழிபாடு செய்து வரவும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்
குலதெய்வ அருள் பெற
வெள்ளிக்கிழமை அன்று அன்றாட பூஜை செய்யும் பொழுது கட்டாயம் குலதெய்வத்தை வேண்டி குலதெய்வம் படம் வைத்து இருப்பவர்கள் குலதெய்வத்தின் முன்பு அகல் தீபம் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அது போல் இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் சகலமும் வசமாகும். தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை தான் அது. எலுமிச்சை பழத்தை வைத்து, குலதெய்வ மந்திரம் உச்சரித்து வழிபட்டு வந்தால், உங்களுடைய குலதெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரியும்.
குலதெய்வம் வீட்டில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
தீபம்
முதலில் பூஜை அறை தீபம் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து விளக்கேற்றும் போது அந்த விளக்கு எப்போதும் போல் இல்லாமல் மிகவும் விளக்கு கொழுந்து விட்டு உயர உயர ஏரிகிறது என்றாள் அந்த தீபத்தை வளர்த்துக் கொண்டிருப்பதை உங்கள் குலதெய்வமாகத்தான் இருக்கும்.
பல்லி சத்தமிடுதல்
இரண்டாவதாக பல்லி சத்தமிடுதல் ஆம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இறை சக்தி என்றால் தெய்வ சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இறை சக்திகள் அதிகமாக இருக்கும் இடத்தில் பல்லிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்றால் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கும் இதுவே உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா இல்லையா என்பதை காட்டி கொடுத்து விடும்.
சந்தனத்தின் நறுமணம்
மூன்றாவதாக திடீர் நறுமனம் வருதல் ஆம், வீட்டில் சந்தனத்தின் நறுமணம், விபூதியி நறுமணம், பூவின் வாசம் இந்த வாசனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் தீடிர் வாசனைகள் வருகிறது என்றால் உங்கள் வீட்டில் குல தெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.
சுருட்டு வாசனை
மேலும் சில குடும்பத்தினருக்கு கருப்பன், அய்யனார், முனியசாமி போன்ற ஆண் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும் இந்த தெய்வங்களுக்கெல்லாம் நாம் சுருட்டை ஒரு பிரசாதமாக வைத்து நாம் அதற்கு ஏற்றார் போல் உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று சுருட்டு வாசனை வருவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் குல தெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையாக நம்பலாம்.
கோவில் எலுமிச்சை
நான்காவதாக எலுமிச்சை பழம் ஆம் நீங்கள் எப்போது கோவில்களுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டில் நிலை வாங்கி அல்லது பூஜை அறையிலும் வைத்திருப்பீர்கள். அப்படி வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் நாட்கள் செல்ல செல்ல சுருங்கி காய்ந்து போகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
காகம் கரைதல்
ஐந்தாவது காகம் ஆம் காகமும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும்
குலதெய்வம் உத்தரவு
ஆறாவதாக அறிகுறி சில சமயங்களில் நீங்கள் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் குறித்தோ அல்லது நல்ல காரியங்கள் குறித்தோ பேசும்போது அல்லது இந்த நல்ல குறித்தோ குறித்து உங்கள் குல தெய்வங்களிடம் நீங்கள் பிராத்தனை வைக்கும் போது உங்கள் குலதெய்வங்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க நோக்கத்தில் ஒரு சில விஷயங்களை செய்வார்கள் இதில் சிலருக்கு தெரிந்த பொதுவான விஷயம் உங்கள் குலதெய்வத்தின் மேல் வைக்கின்ற பூ கீழே விழும் அல்லது எலுமிச்சம்பழம் கீழே விழும் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும்.
குலதெய்வ அபிஷேக பொருட்கள்
இறைவனுக்கு செய்யக்கூடிய அபிஷேக திரவியங்களின் பெயர்களை வரிசைப்படுத்தவும். எத்தனை விதமான அபிஷேக பொருட்கள் உள்ளது என்பது பற்றி விவரமாக பதிவிட முடியுமா#
பதினொன்று அபிஷோகங்கள்.
1 வாசனை தைலம்/ எண்ணெய்
2 பஞ்சகவ்யம்
3 பால்
4 தயிர்
5 நெய்
6 பஞ்ஞாமிர்தம்
7 கரும்புசாறு
8 பழச்சாறு/ பழங்கள்
9 சந்தனம்/ பன்னீர்
10.விபூதி
10 கும்பம் நீர் / ஸ்வர்ணாழிஷேகம்
குலதெய்வம் படம் வீட்டில் வைக்கலாமா?
நம் வாழ்வின் பிரச்னைகள் ஏற்படும்போது அவை ஏன் நிகழ்கின்றன என்று யோசிப்பதைவிட அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்தது என்பார்கள் ஞானிகள். நம்மில் பலரும் நம் பிரச்னைகளுக்காக ஜோதிடர்களை அணுகிக் காரணம், பரிகாரம் கேட்பதுண்டு. அப்போது பல ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டையே பரிகாரமாகக் கூறுவர்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
சில குலதெய்வங்களின் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். மனதால் நினைத்து வழிபடும் பழக்கமே சில குடும்பங்களில் உள்ளது. அப்படியானால் குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்றால் வழிபடலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
12 Rasi Athishta Number in Tamil -12 ராசிக்குமான அதிர்ஷ்ட எண்கள்
12 Rasi Athishta Number in Tamil – நீங்கள் எப்போதாவது எங்கள் எண் கணித வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டால், எண்கள் நமது ஆளுமை, உணர்வுகள் மற்றும் ஜாதகத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். நீங்கள் பிறந்தது முதல் உங்கள் துணைக்கு சொந்தமானது வரை, அதிர்ஷ்ட எண்கள் வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து வரலாம். ஆனால் இந்த ஆதாரங்கள் அனைத்திலும் பிரகாசிப்பது ஜோதிடத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். நீங்கள் அதை நம்புவீர்கள், இல்லையா?
நீங்கள் செய்வீர்கள் என்று யூகித்து, எங்கள் நிபுணரான எண்கணித நிபுணரிடம் உதவி பெற்று, ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண் என்ன என்பதை எங்களிடம் கூறச் சொன்னோம் , அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது இங்கே.
மேஷம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
மேஷம் தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தையும் விதியையும் உருவாக்குபவர்கள் என்றாலும், அவர்களின் அதிர்ஷ்ட எண் அல்லது எண்கள் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தால் அவர்களின் அதிர்ஷ்டம் பெருகும். எனவே எங்கள் நிபுணர் எண் கணித வல்லுநர்களின் கூற்றுப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண்கள் 6, 24 மற்றும் 64 ஆகும். இருப்பினும், சூதாட்ட நோக்கங்களுக்காக இந்த எண்களை பயன்படுத்த வேண்டாம் என்பதை ஆரியர்கள் உறுதி செய்ய வேண்டும். சரி, இந்த எண்கள் கூட மதிப்புக்குரியதா? சரி, நிச்சயமாக, நீங்கள் அவற்றை உங்கள் கடவுச்சொல்லாகவோ அல்லது அதுபோன்ற எதையும் வைத்திருக்கலாம். அவ்வாறு செய்வது உங்கள் சேமிப்பு, பணத்தின் அதிர்ஷ்டம் மற்றும் பலவற்றை அதிகரிக்கலாம்.
ரிஷபம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
ரிஷப ராசியினரின் அதிர்ஷ்ட எண்கள் 6, 11 மற்றும் 17. இந்த எண்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பார்த்தால், நீங்கள் நேர்மறை ஆற்றலுடன் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம், இதனால் நீங்கள் இருந்ததைச் செய்து கொண்டே இருங்கள். புளிப்பு எண் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த அதிர்ஷ்ட எண்கள் உங்கள் தொழில்முறை வெற்றியைச் சேர்க்க உதவும். இருப்பினும், நமது ராசியின்படி அதிர்ஷ்ட எண்களை நீங்கள் அதிகம் நம்பக்கூடாது என்றும் எண் கணித வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். புத்தி மற்றும் அதிர்ஷ்டத்தின் கலவையை நீங்கள் தேட வேண்டும்.
மிதுனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
ஜெமினிக்கு அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . ஏனென்றால், இந்த நபர்கள் நீண்ட நேரம் ஒரு அட்டவணையில் சிக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் காலப்போக்கில் அவர்களின் ஆளுமையில் மாற்றங்களை கொண்டு வருவது போல், அவர்களின் அதிர்ஷ்ட எண்களும் மாறுகின்றன. இருப்பினும், இப்போதைக்கு, ஜெமினிக்கு அதிர்ஷ்டமான எண்கள் 3, 5 மற்றும் இந்த எண்களைச் சேர்த்த பிறகு வரும் முடிவுகள் – 5+3 = 8. 5+5 = 10, முதலியன.
சிம்மம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
சிம்ம ராசிக்கான அதிர்ஷ்ட எண்கள் 9, 19 மற்றும் 49 ஆகிய எண்களைக் கொண்டு, 9, 19 மற்றும் 49 ஆகிய எண்களைக் கொண்டவையாகும். இந்த எண்களைக் கொண்ட முஹூர்த்தங்களில் எந்த வேலையும் செய்வது உங்கள் யோகத்தின் நன்மையைக் கூட்டி, உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். எண் 9 ஒன்பது தெய்வங்களுடன் தொடர்புடையது. அதனால்தான் சிம்ம ராசிக்காரர்கள் பெண்மையின் ஆற்றல்களுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த ஆற்றல்கள் லியோஸை தொடர்பு, சிற்றின்பம் மற்றும் பணிவு ஆகியவற்றில் சிறந்ததாக்குகின்றன.
கன்னி ராசி அதிர்ஷ்ட எண்கள்
கன்னி பூமியின் உறுப்புக்கு சொந்தமானது. பூமியின் உறுப்பு என, அவர்கள் தங்கள் சொந்த செயல்களாலும் மற்றவர்களின் செயல்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் புத்திசாலித்தனத்தில் தொங்கிக்கொண்டு தங்கள் சுற்றுப்புறங்களை சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். கன்னி ராசிக்கான அதிர்ஷ்ட எண்கள் – 0, 14 மற்றும் 49. இந்த எண்களின்படி நீங்கள் எதையும் தொடங்கினால், அது உங்கள் சுற்றுப்புறத்தை உங்களுக்கு நன்றாக வடிவமைக்க உதவும். சுருக்கமாக, நீங்கள் வெளி உலகிற்கு உள்ளேயும் வெளியேயும் சக்தியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண்ணின் மந்திரம் இதுதான் .
துலாம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
துலாம் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் சமநிலையைக் காண ஏங்குகிறது. எனவே ஒரே எண்ணில் (11, 77, 88, 99, 66) எந்த இரட்டை இலக்க எண்ணும் அவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம். இருப்பினும், ஒற்றை இலக்க எண்களைப் பொறுத்தவரை, நமது ஜோதிடர்களின் கூற்றுப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு 8 மற்றும் 2 எண்கள் நல்லவை. இந்த எண்களை உங்கள் தலையின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் ஏதாவது செய்தால், அதில் நீங்கள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.
விருச்சிகம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகவும் ஆர்வமாகவும் கவலையுடனும் இருப்பார்கள். எண்கள் உண்மையில் அவர்களுக்கு இந்த கவலையை குறைக்க உதவும். விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்ட எண்கள் 5 , 18 மற்றும் 69. இந்த எண்களைச் சுற்றி பகலில் யோகம் இருந்தால் , அந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அது உங்களுக்கு நன்றாக நடக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஸ்கார்பியோஸ் வெளிச்செல்லும் மற்றும் புறம்போக்கு என்பதால், இந்த எண்களை பயணத்தின் போதும் மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பயணம் செய்வதற்கு முன் 18ஐப் பார்ப்பது அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது சூரியன் கிரகத்திலிருந்து வரும் ராசியாகும்.
தனுசு ராசி அதிர்ஷ்ட எண்கள்
தனுசு ராசிக்காரர்கள் இரகசியமானவர்கள். அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் மற்றும் ஒரு காளையின் ஆற்றல் கொண்டவர்கள். இருப்பினும், அவர்கள் நீண்ட கால பிணைப்புகளை உருவாக்குவது பெரும்பாலும் கடினமாக உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்தாலும், அந்த பிணைப்பு ‘வெறும் நண்பர்கள்’ விஷயத்தைத் தவிர வேறில்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண்கள் என்பதால் 5, 7, 15 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் .
மகரம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
மகர ராசிக்காரர்கள் 3, 5, 14, மற்றும் 95 ஆகிய எண்களுடன் அவர்களைச் சுற்றி வைத்துக் கொண்டால் வெற்றியைக் காண்பார்கள். உடல்நலப் பயிற்சிகளை மேற்கொள்வது, குறிப்பாக இந்த எண்களில் ஏதேனும் ஒன்றில் கடிகாரத்தின் டிக் இருக்கும் போது (எ.கா: 5:14 AM); உங்கள் சக்கரங்களை சிறப்பாக சீரமைக்க உதவும். இத்தகைய நேரங்கள் எந்த வகையான அமர்வையும் முன்னெப்போதையும் விட அதிக பலனளிக்கின்றன.
கும்பம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
கும்பம் தங்கள் உணர்ச்சிகளை நன்றாக மறைக்கும். ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புகிறார்களா? சரி, நம் ஒவ்வொருவரையும் போலவே, அவர்களும் சில செல்லம், அன்பு மற்றும் அக்கறையை நாடுகின்றனர். இந்த ஆடம்பரத்தை யார் அனுமதிக்க முடியும் என்று யூகிக்கிறீர்களா? சரி, அது அவர்களின் பிறந்த தேதியில் 2, 17 ஆகியவற்றைக் கொண்ட எவரும் இருக்கலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு மற்ற அதிர்ஷ்ட எண்கள் 77 மற்றும் 35 ஆகும்.
மீனம் ராசி அதிர்ஷ்ட எண்கள்
மீன ராசிக்காரர்கள் 5 மற்றும் 7 ஆகிய எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நேர்மறையான முடிவுகளைப் பெறலாம். மேலும், 15, 36, 21 போன்ற இந்த எண்களின் கூட்டுத்தொகையான எண்கள் மீனத்திற்கு அதிர்ஷ்டம். எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்துப் போராட இந்த எண்கள் உங்களுக்கு உதவும். மேலும், நீங்கள் இயல்பிலேயே கொஞ்சம் பொருள்சார்ந்தவர் என்பதும், இந்த எண்களைக் கொண்ட சில சமயங்களில் எதையாவது வாங்குவதும் மங்களகரமானது. இருப்பினும், ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஏழு என்ற அளவில் எந்தப் பொருளையும் வாங்கக்கூடாது.
12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? – 12 Rasi Niram in Tamil
12 ராசிக்காரர்களும் எந்த நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் என்பதை அறிந்து கொள்வோம்.
12 Rasi Niram in Tamil – உங்கள் ராசிக்குரிய நிறத்தை நீங்கள் பயன்படுத்தினால் நீங்களும் ராசியானவராக அவர்களை போல் மாறிவிடுவீர்கள். அந்த வரிசையில் 12 ராசிக்காரர்களுக்கும் உரிய ராசியான நிறங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
மேஷ லக்னம்/ராசி நிறம்
மேஷ லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் சிவப்பு நிறத்திற்குச் சொந்தக்காரர். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். இது முதல் தரமான, அதிர்ஷ்டத்தை உங்களுக்கு அளிக்கும். சிவப்பு நிறத்தைத் தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிஷபம் லக்னம்/ராசி நிறம்
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மிதுனம் லக்னம்/ராசி நிறம்
புதனின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
கடகம் லக்னம்/ராசி நிறம்
சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது இந்த கடகம். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள், மங்கிய வெண்மை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் பெருகும்.
சிம்மம் லக்னம்/ராசி நிறம்
சூரியனின் ராசியாக இந்த சிம்ம ராசி உள்ளது. இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், மங்கிய வெண்மை, மஞ்சள் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் உண்டாகும்.
கன்னி லக்னம்/ராசி நிறம்
புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
துலாம் லக்னம்/ராசி நிறம்
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி துலாம் ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம் லக்னம்/ராசி நிறம்
விருச்சிக லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனுசு லக்னம்/ராசி நிறம்
தனுசு லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகரம் லக்னம்/ராசி நிறம்
மகர லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கும்பம் லக்னம்/ராசி நிறம்
கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம் லக்னம்/ராசி நிறம்
மீனம் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
12 ராசிகளுக்கு வேலை – உழைப்பு என்பது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அத்தகைய உழைப்பு என்பது வெறும் பொருளீட்டும் ஒரு வேலையாக இல்லாமல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நாம் வாழும் சமுதாயத்திற்கும் பயன்தரும் வகையில்இருப்பது அவசியம். அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் எத்தகைய வேலை, தொழில் செய்தால் அனைவரும் பயன்பெறுவது பற்றி இங்கு காண்போம்.
மேஷம் ராசி வேலை
மிகவும் சுறுசுறுப்பு தன்மை கொண்ட நீங்கள் எப்போதும் உடல், மனம் இரண்டும் இணைந்து செயல்படத்தக்க பணிகள், வேலைகளை செய்வதால் உங்களுக்கு மிகுந்த நன்மையளிக்கும். தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் பிறருக்கு உடற்பயிற்சியாளர், யோகா குரு போன்ற உடல், மனதிற்கு பயிற்சி தரும் பயிற்சியாளர் பணிகளை மேற்கொள்ளலாம்.
ரிஷபம் ராசி வேலை
ரிஷபம் ராசியினருக்கு தாங்கள் வசிக்கும் வீடு ஆலயம் போன்றதாகும். கலைத்திறன் அதிகம் கொண்ட ரிஷப ராசியினர் தாங்கள் வசிக்கும் வீட்டை சிறப்பாக அலங்கரிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே வீட்டு கட்டிட வடிவமைப்பு, வீட்டு உள்ளலங்காரம், தோட்டம் வடிவமைப்பு போன்ற தொழில்களில் ஈடுபாடுவதால் ரிஷப ராசியினர் மனநிறைவு பெறுவார்கள். மிதுனம்: கல்வியறிவு இயற்கையிலேயே ஒருவருக்கு இருக்கும் அறிவாற்றல் ஆகிவற்றிற்கு புதன் பகவான் காரகனாகிறார்.
மிதுன ராசி வேலை
ராசிக்கு அதிபதி புதன் என்பதால் அனைத்து விடயங்களையும் கற்று பண்டிதர்களாக இருப்பார்கள். எனவே மிதுன ராசியினர் பிறருக்கு கல்வி, கலைகள், தொழில் போன்றவற்றை கற்று தரும் ஆசிரியர், குரு போன்ற பணிகளை செய்வது சிறந்தது. கடகம்: மனிதன் தனித்து அறியப்படுவதற்கு காரணம் அவனது மனம் தான். மனோகரகனாகிய சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த ராசி கடக ராசியாகும்.
கடக ராசி வேலை
கடக ராசியினர் பிற மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் ஆவர். பிற எந்த ஒரு ராசியினரும் கடக ராசியினரிடம் தங்களின் மனக்குறைகளை கூறுவதால், கடக ராசிக்காரர்கள் அவர்களுக்கு சிறந்த ஆலோசனை மற்றும் ஆறுதல் தருபவர்களாக இருக்கின்றனர்.
சிம்மம் ராசி வேலை
நேர்மறை குணங்கள் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தங்களை சுற்றியிருக்கும் தீமைகளை களைவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான காரியங்களை செய்து பொதுநல சேவையும், அரசியல் துறையில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களுக்கு நன்மைகளை செய்யலாம். கன்னி: புதன் பகவான் ஒரு மனிதனின் படிப்பாற்றலுக்கு காரகனாகிறார்.
கன்னி ராசி வேலை
ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே மிகுந்த படைப்பாற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். பொதுவாக கன்னி ராசியினர் பிறரிடம் கை கட்டி வேலை செய்வதை விட, வேலையற்ற பலருக்கும் வேலை தரும் வகையிலான பணிகள், முயற்சிகள் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
துலாம் ராசி வேலை
சுக கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் பிறந்த நபர்கள் இயற்கையிலேயே அழகுணர்ச்சி அதிகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பிறரையும் அழகாக்கி காட்டும் திறன் அதிகம் கொண்டவர்கள் எனவே ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற தொழில்கள், கலைத்துறை சார்ந்த திரைப்படம், நாடகம் போன்றவற்றில் ஈடுபடுவது சிறந்தது.
விருச்சிகம் ராசி வேலை
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசியினர் இயற்கையிலேயே பிறரின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவர்களாவர். பிறருக்கு ஆலோசனை தருவது, சமுதாயத்திற்கு நன்மை தரும் சேவை மற்றும் தங்கள் பகுதியை சார்ந்த மக்களுக்கு சேவை செய்தல் போன்ற பணிகளை செய்வதால் விருச்சிக ராசியினர் மற்றும் அனைவருக்கும் நன்மை தருவதாக அமையும்.
தனுசு ராசி வேலை
குரு பகவானின் அருள் கொண்ட தனுசு ராசியில் பிறந்தவர்கள் பல மேன்மையான குணங்களை பெற்றிருப்பார்கள். கனிவான அணுகுமுறை, அனைவரின் மீதும் அன்பு கொண்ட தனுசு ராசியினர் ஆதரவற்றவர்கள், விலங்குகள் நலம் போன்ற விடயங்களில் ஈடுபட்டு தங்களால் இயன்ற சேவைகளை செய்வதால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.
மகரம் ராசி வேலை
செவ்வாய் பகவானின் உச்ச வீடாக மகரம் இருக்கிறது. எனவே இந்த ராசியினருக்கு இயற்கையிலேயே பிறருக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும் திறன் அதிகமிருக்கும் என்பதால் இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் தலைமை பணிகளை ஏற்கும் போது அவர்களை சார்ந்தவர்கள் அனைவரும் மிகுந்த நன்மைகள், லாபங்கள் அடையும் சூழல் ஏற்படும்.
கும்பம் ராசி வேலை
சனி பகவானின் சொந்த ராசியாக இருக்கும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த பொறுமை மற்றும் நிதானம் கொண்டவர்களாவர். அதே நேரத்தில் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மனஉறுதியும் அதிகமிருக்கும். எதையும் பிறருக்கு எடுத்து கூறுவதில் ஆர்வம் உள்ள இந்த ராசியினர் பத்திரிகையாளர், ஆவண படம் எடுப்பது, சரித்திர ஆராய்ச்சியாளர் போன்ற பணிகளை செய்வதால் அனைவரும் பயன்பெறுவர்.
மீனம் ராசி வேலை
பிறரின் மனம் மற்றும் எண்ண ஓட்டங்கள் என்னவென்று சுலபத்தில் கணிக்கும் திறன் கொண்டவர்கள் குரு பகவானின் அதிக்கம் கொண்ட மீன ராசியினர். பிறருக்கு எதையும் கற்று தரும் அல்லது உபதேசிக்கும் ஆற்றல் கைவரபெற்ற மீனம் ராசியினர் புத்தகம் எழுதும் எழுத்தாளர் பணியினை செய்யும் போது படிப்பவர்களுக்கு மிகுந்த ஆற்றலை தரும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஆதிக்கம் கொண்ட கடவுளை வணங்கினால் வாழ்வில் தீய பலனை (12 ராசி கடவுள் -12 Rasi God in Tamil) தவிர்த்து நல்ல முன்னேற்றத்தை அடையாளம். அவற்றை காண்போம். இது பொதுவான பலனே ஆகும் மற்றபடி பரிகாரம் கிடையாது. பரிகாரம் என்பது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும்.
12 ராசி கடவுள்
மேஷம் ராசி கடவுள்
மேஷம் ராசி கடவுள் முருகன்
ரிஷபம் ராசி கடவுள்
ரிஷபம் ராசி கடவுள் மஹாலட்சுமி
மிதுன ராசி கடவுள்
மிதுன ராசி கடவுள் மஹாவிஷ்ணு
கடக ராசி கடவுள்
கடக ராசி கடவுள் அம்மன்/அம்பாள்
சிம்ம ராசி கடவுள்
சிம்ம ராசி கடவுள் சிவபெருமான்
கன்னி ராசி கடவுள்
கன்னி ராசி கடவுள் ஸ்ரீமன் நாராயணன்
துலாம் ராசி கடவுள்
துலாம் ராசி கடவுள் மகாலட்சுமி
விருச்சிக ராசி கடவுள்
விருச்சிக ராசி கடவுள் முருகப்பெருமான்
தனுசு ராசி கடவுள்
தனுசு ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.
மகர ராசி கடவுள்
மகர ராசி கடவுள் சிவபெருமான்
கும்ப ராசி கடவுள்
கும்ப ராசி கடவுள் சிவபெருமான்
மீனம் ராசி கடவுள்
மீனம் ராசி கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு.
செவ்வாய்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக திகழும் செவ்வாய், கிரகம் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் படைப்பாலனாக இருக்கிறார்.
சுக்கிரன்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசி அதிபதியாக திகழும் சுக்கிரன், கல்வி, புத்தி ஆகியவற்றிக்கு காரகனாக இருக்கிறார்.
புதன்:
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியாக திகழும் புதன், கல்வி மற்றும் புத்திக்கு காரகனாக இருக்கிறார்.
சந்திரன்:
கடக ராசிக்கு அதிபதியாக இருக்கும் சந்திரன் மனம் மற்றும் தாய்க்குக் காரகன் ஆவார்.
சூரியன்:
சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழும் சூரியன், உடல் , தந்தைக்குக் காரகனாக இருக்கிறார்.
குரு:
தனுசு மற்றும் மீனம் ராசியின் அதிபதியாக இருக்கும் குரு, தனம் மற்றும் புத்திர காரகன் ஆவார்.
சனி:
மகரம் மற்றும் கும்பம் ராசி அதிபதியாக இருக்கும் சனிபகவான்ஆயுள் மற்றும் தொழில் காரகன் ஆவார்.
12 ராசிகளில் ஒவ்வொருவருக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த இறைவன் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் நட்பு, விரோதம் அல்லது நடுநிலையானவர்கள். (12 ராசி அதிபதிகள் – 12 Rasi Athipathigal in Tamil) அதன்படி, சூரியன், வெள்ளி, புதன், சந்திரன், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள். ஒரு கிரகமானது அதன் சொந்த வீட்டில் (ஆட்சி வீடு) இருந்தால், அந்த கிரகத்துக்கு சக்தி மூன்று மடங்காக இருக்கும். அதேபோல், ஒருசில கிரகங்களுக்கு வீடுகள் நீச வீடாகவும், உச்ச வீடாகவும் இருக்கும். அதாவது, உச்ச வீட்டில் இருக்கும்போது அந்த கிரகம் ஐந்து மடங்கு சக்தியுடன் உச்ச பலமாக இருக்கும். அதுவே, நீச வீட்டில் இருக்கும்போது கிரகம் பலம் இழந்து காணப்படும். சரி வாங்க, 12 ராசிகளுக்கு உண்டான ராசி அதிபதிகள் பற்றி பார்க்கலாம்.
12 ராசி அதிபதிகள்
மேஷம் ராசி அதிபதி
மேஷம் ராசி அதிபதி -செவ்வாய்
ரிஷபம் ராசி அதிபதி
ரிஷபம் ராசி அதிபதி – சுக்கிரன்
மிதுனம் ராசி அதிபதி
மிதுனம் ராசி அதிபதி – புதன்
கடகம் ராசி அதிபதி
கடகம் ராசி அதிபதி – சந்திரன்
சிம்மம் ராசி அதிபதி
சிம்மம் ராசி அதிபதி – சூரியன்
கன்னி ராசி அதிபதி
கன்னி ராசி அதிபதி – புதன்
துலாம் ராசி அதிபதி
துலாம் ராசி அதிபதி – சுக்கிரன்
விருச்சிகம் ராசி அதிபதி
விருச்சிகம் ராசி அதிபதி – செவ்வாய்
தனுசு ராசி அதிபதி
தனுசு ராசி அதிபதி – குரு
மகரம் ராசி அதிபதி
மகரம் ராசி அதிபதி – சனி
கும்பம் ராசி அதிபதி
கும்பம் ராசி அதிபதி – சனி
மீனம் ராசி அதிபதி
மீனம் ராசி அதிபதி – குரு
ராசி அதிபதியின் நிலை மற்றும் அதற்கு உரிய தெய்வங்கள்
சூரியன்- இவர் உடல், திறமை, தொழில், எண்ணம் மற்றும் ஆற்றலுக்குக் காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் சிவன் மற்றும் சூரியன்.
சந்திரன்- இவர் சமயோஜிதபுத்தி, கற்பனாசக்தி, உடல், எண்ணம் மற்றும் மனோகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் அம்பிகை.
செவ்வாய்- இவர் சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் திறமைகளுக்குக் காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் முருகப்பெருமான்.
புதன்- இவர் கலைகள், கற்பனாசக்தி மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு.
குரு – இவர் கலைகள், ஆற்றல் மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் தட்சிணாமூர்த்தி.
சுக்கிரன்- இவர் ஞானம், செல்வம், திறமை மற்றும் சுகபோககாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி.
சனி – இவர் நேர்மை மற்றும் மந்தகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் விநாயகர்.
நாமும் நம் ராசிக்கான அதிபதிக்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை குறைத்து அருள் புரிவார்.