30 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? -Udal Edai Athikarikka
Udal Edai Athikarikka– உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை – உடல் எடையைக் குறைக்க பலரும் முயற்சிக்கும் வேளையில், எவ்வளவு சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கவில்லையே… என்று புலம்பு மக்கள் ஒருபுறம். உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்…
உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் – weight gain foods in tamil
பொட்டுகடலை மற்றும் சர்க்கரையை நன்றாக அரைத்து, அதில் நெய் ஊற்றி சிறு சிறு உருண்டையாக்கி இரவில் சாப்பிட்டு வந்தால், உடை எடை அதிகரிக்கும்.
எள்ளை நன்றாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் அதனை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
முளைகட்டிய பயிர் வகைகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
திராட்சை மற்றும் பேரிச்சம் பழத்தை இரவில் ஊற வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் இதனை பாலுடன் கலந்து குடித்து பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க
எள் மற்றும் உளுந்தை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வேர்க்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றையும் வறுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் கொள்ளு, பூசணிக்காய் விதை, அஸ்வகந்தா சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
உருளைகிழங்கு, வாழைப்பழம், அத்திப்பழம், மாம்பழம் இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
எள்ளால் செய்த பொருளைச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
மீன், முட்டை, முந்திரி, திராட்சை, வேர்க்கடலை, நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
நெய் மற்றும் வெண்ணெயை உணவில் சேரத்துக்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.
மதிய வேளையில் பருப்பு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டு வர எடை கூடும்.
கொதிக்கின்ற தண்ணீரில் ஜவ்வரிசியைப் போட்டு நன்றாக கிளர வேண்டும். பின்னர், முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்க்க வேண்டும். பின்னர் பாலை ஊற்றி கிளறி விட வேண்டும். நன்றாக சுண்டிய உடன் அதில் நெய் ஊற்றி சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.
பசும்பாலுடன் வெல்லம் சேர்த்துக் குடித்து, பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க
பெண்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதலாக 500 முதல் 1000 கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், தினசரி 500 கலோரி ஆற்றல் அளிக்கும் உணவுகளை கூடுதலாக சாப்பிட்டாலே ஒரு வாரத்துக்கு ஒரு பவுண்ட் எடையை அதிகரிக்கும்.
ஆண்கள் உடல் எடை அதிகரிக்க
ஆண்கள் முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கும்.
உடல் சதை அதிகரிக்க
உடல் சதை அதிகரிக்க பசு நெய், வெண்ணெய் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும். மதிய உணவின் போது சாதத்தில் 2 டீஸ்பூன் நெய்விட்டு சிட்டிகை உப்பு போட்டு சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாமே
உடற்பயிற்சி அவசியம்-Excercise benefits
கை, கால், இடுப்பு பகுதியில் உள்ள கருமை நீங்க இதை செய்யுங்கள் போதும்-Karumai neenga