வயிறு வலி குணமாக நாம் செய்ய வேண்டியது-Stomach pain

வயிறு வலி

வயிறு வலி வரக் காரணம்

உடல் உஷ்ணத்தாலும், சரியாக சாப்பிடாத காரணத்தாலும், காரமான உணவைச் சாப்பிடுவதாலும் வயிற்றில் வலி உண்டாகும். வயிற்று வலியைக் குறைக்கக்கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.

வயிறு வலி குணமாக

வயிறு வலியைக் குணப்படுத்தக்கூடிய மிக எளிமையான வீட்டு வைத்தியத்தைக் காண்போம்.

புதினா

புதினா இலையைக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து வடிகட்டி அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால், வயிற்றுவலி குணமாகும்.  புதினாவைத் துவையலாகவும், தோசையாகவும், சாதமாகவும் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

பழைய சோறு

முந்தைய நாள் மித்த சாதத்தில் நீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பெருங்காயம் கலந்து குடிக்க வேண்டும். வந்தால் வயிற்று வலி குணமாகும்.

கற்றாழை

கற்றாழைச் சாறைப் பருகி வந்தால், உடல் உஷ்ணம் குறையும். உடல் குளிர்ச்சி பெறும். வயிற்று வலி குணமாகும்.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறை நீரில் கலந்து, குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து வடிகட்டி அதனுடன் உப்பு சேர்த்து  குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

ஓமம்

வெந்நீரில் ஓமத்தைக் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

சீரகம்

சிறிது சக்கரை மற்றும் சீரகத்தை வாயில் போட்டு மென்றால் வயிற்று வலி குணமாகும்.

இதையும் படிக்கலாமே

கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top