எள்ளின் இவ்வளவு மருத்துவக் குணங்களா-Sesame benefits

Sesame benefits

Sesame benefits -எள்ளில் பல வகைகள் இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. எள்ளில்  காப்பர் சத்தும், கால்சிய சத்தும், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின்ஈ, இரும்பு சத்தும் உள்ளன.

எள்ளில்  புரதமும், எண்ணெயும், மாவு பொருட்களும் உள்ளன. எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெயில்  அதிக மருத்துவ குணம் உள்ளது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். எள் 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடியது.

எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு. அவை, கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் ஆகியவையாகும்.

குடல் சார்ந்த நோய்கள்

எள் விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரியாகும். குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை எள் செய்கிறது. குடலில் உள்ள நச்சுகள் முழுவதும் வெளியேறும்.

மூலநோய்

எள் விதையை வெல்லப்பாகுவில் கலந்துக்கொள்ளவும். பின்னர், இதனுடன் தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள் விதையை லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்னர், பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாக்கும்.

இரத்த அழுத்த நோய்

எள் விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் இரத்த அழுத்த நோயை குறைக்க உதவுகிறது. எள் விதைகளைச் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய் குணமாகும்.

தோல் சார்ந்த நோய்கள்

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க உதவுகிறது. எள்ளு விதையை அரைத்துக்கொள்ளவும். அதனை தோல் மீது பூசினால், தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.

முகப்பொலிவு

எள்ளின் இலைகளை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாறை தண்ணீரில் கலந்து முகம் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும். கண்கள் ஒளி பெறும்.  கண் நரம்புகள் பலப்படும்.

உடல்பலம்

எள்ளுருண்டை சாப்பிட்டு வந்தால் உடல் பலமாக இருக்கும். எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் உள்ளது. எள்ளுருண்டை  சாப்பிட்டால் எலும்புகள் பலமடையும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.  உடல் சோர்வானது நீங்கும். எள்ளை சூடான சாதத்தோடு சேர்த்து  உண்டுவர உடல் வலிமை அதிகரிக்கும்.

கண் சார்ந்த பிரச்சனை

எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவிக்கொள்ளவும். பின்னர், சுடுநீரில் மூன்று நாட்கள்  குளித்து வந்தால் சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம் ஆகியவை குணமாகும்.

குடல் நோய்

எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்கள் குணமாகும்.

உடல் வலி

சுடுநீரில் சிறிதளவு எள் இலைகளை போட்டுக்கொள்ளவும். அந்த தண்ணீரில் குளியல் செய்தால், உடல் வலிகளை போக்கும்.

மாதவிடாய் சார்ந்த பிரச்சனை

பனை வெல்லம், கருஞ்சீரகம், ஆகியவற்றை எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டால்,  பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளைத் தீரும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே –

மணமணக்கும் பாசிப்பயிறு லட்டு செய்யும் முறை -Green gram ladoo

Share this post

2 thoughts on “எள்ளின் இவ்வளவு மருத்துவக் குணங்களா-Sesame benefits”

  1. Pingback: உத்தாமணியின் மருத்துவக்குணங்கள்…. -Uthamani mooligai benefits

  2. Pingback: பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள்… -ponnanganni keerai benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top