சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள் – Sangu Poo Benefits

sangu poo benefits

Sangu Poo Benefits- சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய மாற்றுப்பெயர்களைக் கொண்டது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது ஆகும். சங்குப்பூ கொடி வகையைச் சார்ந்தது.பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது சங்குப்பூ. தட்டையான காய்களை உடையது சங்குப்பூ. சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள் மற்றும் நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகளைக் கொண்டது.

காய்ச்சல்sangu Poo Benefits

சங்குப்பூ வேரை நன்றாக நசுக்கிக்கொள்ளவும். நீரில் போட்டு  சுண்டக்காய்ச்சிக்கொள்ளவும். இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், காய்ச்சல் குணமாகும்.

சிறுநீர் எரிச்சல்sangu Poo Benefits

சங்குப்பூ வேரை எடுத்துக்கொள்ளவும்.  கீழா நெல்லி முழு தாவரத்தையும் எடுத்துக்கொள்ளவும். யானை நெருஞ்சில் இலை மற்றும் அருகம்புல்லை எடுத்துக்கொள்ளவும். இவற்றுடன் மிளகு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைத் தயிரில் கலக்கி குடித்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

வயிற்றுப்போக்குsangu Poo Benefits

 சங்குப்பூ வேரை எடுத்துக்கொள்ளவும். அத்துடன், திப்பிலி, சுக்கு , விளாம் பிசின் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். பின்னர், இதனை சிறு சிறு உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும். இதனை நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

sangu poo benefits

வீக்கம்sangu Poo Benefits

சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்டினால் வீக்கம் குறையும்.

இரைப்பு நோய்sangu Poo Benefits

சங்கப்பூ விதைத் தூளை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இதனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால்,  இரைப்பு நோய் குணமாகும்.

இதையும் படிக்கலாமே –

  1. சாமந்திப் பூவின் மருத்துவக்குணங்கள் -samanthi Poo
Share this post

2 thoughts on “சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள்- Sangu Poo Benefits”

  1. Pingback: அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்….-ashwagandha benefits....

  2. Pingback: பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவக் குணங்கள்… -ponnanganni keerai benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top