சாமந்திப் பூவின் மருத்துவக்குணங்கள் – Samanthi Poo Benefits
Samanthi Poo -சிவந்திப்பூ என்று அழைக்கப்படும் சாமந்தி பூவில் மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சாமந்தி பூ மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் பூக்கும் தன்மையுடையது.
தலைவலி – Samanthi Poo Benefits
சாமந்தி பூவின் இதழ்களைப் பறித்துக்கொள்ளவும். அதனை, நிழலில் உலர்த்திக்கொள்ளவும். பின்னர், பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலியானது குணமாகும்.
மலச்சிக்கல் – Samanthi Poo Benefits
சாமந்தி பூவின் இதழ்களைப் பறித்துக்கொள்ளவும்.அதனை, தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரில் மிளகு, சீரகத்தைப் போட்டுக்கொள்ளவும். தண்ணீர் கொதித்தப்பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.
உடல் உஷ்ணம் – Samanthi Poo Benefits
உடல் உஷ்ணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுவர். இவர்கள் சாமந்தி பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
உடல் எடை அதிகரிக்க – Samanthi Poo Benefits
சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்துக்கொள்ளவும். பின்னர், அதனை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். எடை அதிகரிக்கும்.
சுளுக்கு – Samanthi Poo Benefits
சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்துக்கொள்ளவும். அந்த நீரை சுளுக்கு உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சுளுக்கு குணமாகும்.
காய்ச்சல் – Samanthi Poo Benefits
சாமந்திப் பூவை கொதிக்க வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்துவிடவும். சிறிது நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
சிறுநீர் எரிச்சல் – Samanthi Poo Benefits
சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த நீரை அருந்தி வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
Pingback: சங்குப்பூவின் மருத்துவக்குணங்கள்…-sangu poo benefits - ஆரோக்ய பயணம்