குழந்தையின் விக்கல் வரக் காரணம் என்ன? Reason for baby hiccups…
குழந்தையின் விக்கல்
கைகுழந்தையைப் பராமரிக்கக்கூடிய அம்மாக்களுக்கு புரியாத விஷயமாக இருப்பது குழந்தைக்கு வரக்கூடிய விக்கல். கைகுழந்தைகளுக்கு விக்கல் வருவது சகஜமான விஷயம்தான். விக்கலைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.
குழந்தைக்கு விக்கல் வரும்போது குழந்தையைத் தொந்தரவு செய்யாமல் படுக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் விக்கல் அடங்கிவிடும்.
குழந்தை பால் குடிக்கும் போதும், உணவு உண்ணும் போது அதிகளவு காற்று வாயின் உள்ளே செல்லும். அதனால், குழந்தை பால் குடித்தப்பிறகும், உணவு உண்ட பிறகும் தோளில் போட்டு தட்ட வேண்டும். அப்போது காற்றானது ஏப்பமாக வெளியேறும்.
குழந்தை பால் குடிக்கும் போதும், உணவு உண்ணும் போது மெதுவாக சாப்பிடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக பால் குடிப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு அதிகமாக உணவு அளிக்கக்கூடாது. உணவு உண்ட பின் தோளில் போட்டு தட்ட வேண்டும்.
இதையும் படிக்கலாமே
மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil
Pingback: ஆறு மாத குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்கச் சாப்பிட வேண்டிய சத்து மாவு -Cerelac for 6 months baby