கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food…

கர்ப்ப காலத்தில் பெண்கள்

கர்ப்பம் தரித்த பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.

பருப்பு வகைகள்

கர்ப்பிணி பெண்கள் பட்டாணி, கொண்டைக்கடலை, சுண்டல் போன்ற புரதச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிட வேண்டும். இவை கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

நட்ஸ்

பாதாம் பருப்பு, வால்நெட், முந்திரி,பேரிச்சப்பழம், உலர்திராட்சை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். இதனால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கீரைகள்

கீரைகளைக் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரையில் நார்சத்து மற்றும் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. முருங்கைக்கீரை, பசலைக் கீரை, வெந்தயக்கீரை இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வாராது.

முட்டை

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, பி2, பி12, ஒமேகா 3 , கால்சியம் முதலிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. தாய்மார்கள் அவசியம் முட்டை சாப்பிடுதல் வேண்டும். இதன் மூலம் தாய் மற்றும் சேய் உடல் உறுதியுடன் இருப்பார்கள். முட்டை கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மீன்கள்

ஒமேகா 3 உள்ள மீன்களைச் சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

தயிர்

தயிரைக் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். தயிரில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிட்டு வந்தால், குழந்தை எந்த குறையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

வாழைப்பழம்

கர்ப்பிணி பெண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. செரிமானம் சார்ந்த கோளாறுகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே

திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top