மருத மரத்தின் மருத்துவப் பயன்கள்Marutha Maram Benefits

marutha maram benefits

Marutha Maram Benefits-மருத மரத்தில் எண்ணற்ற மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மருத பட்டையானது மனிதனின் நோய்களைக் குணப்படுத்தும் பொருளாக உள்ளது. மருத பட்டையானது துவர்ப்பு சுவை உடையது. மருதப் பட்டையில் வைட்டமின் சி , ஆன்டி ஆக்சிடென்ட்  உள்ளது. மருதப் பட்டையின் மருத்துவக்குணத்தைக் காண்போம்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் – Marutha Maram Benefits

மருதம் பட்டையைக் காய வைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். அதனை, தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். உடலானது குளிர்ச்சி பெறும்.

இரத்த அழுத்தம் – Marutha Maram Benefits

மருதம் பட்டையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன், சீரகம், சோம்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் இரத்த அழுத்தமனாது குறையும்.

இதய படபடப்பு – Marutha Maram Benefits

மருதம் பட்டையைக் காய வைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். கசகசாவை வறுத்துக்கொள்ளவும். அதனை அரைத்துக்கொள்ளவும். மருதப்பொடி மற்றும் கசகசா பொடி இரண்டையும் பாலில் கலந்து குடித்து வந்தால், படபடப்பு நீங்கும். இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும்.

marutha maram benefits

மாதவிடாய் சார்ந்த பிரச்சனை – Marutha Maram Benefits

மருதப் பட்டையை நீரில் போட்டுக்கொள்ளவும். அதனை நன்றாக கொதிக்கவிடவும். பின்னர், அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். தண்ணீர் ஆறியவுடன் அதில் தேன் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான உறக்கம் – Marutha Maram Benefits

மருதம் பட்டை  மற்றும் சீரகத்தை நீரில் போட்டுக்கொள்ளவும். இந்த தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் நிம்மதியான உறக்கம் வரும்.

இதையும் படிக்கலாமே-

  1. இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள் – Madhuca Tree Benefits..
Share this post

1 thought on “மருத மரத்தின் மருத்துவப் பயன்கள்- Marutha Maram Benefits”

  1. Pingback: சாமந்திப் பூவின் மருத்துவக்குணங்கள்… -samanthi poo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top