இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள் – Madhuca Tree Benefits

Madhuca tree benefits

Madhuca Tree Benefits-இருப்பை, சூலிகம், மதூகம் என்ற மாற்று பெயர்கொண்ட இலுப்பை மரத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.  இலுப்பை மரமானது கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பெரும்பாலும் இலுப்பை மரமானது காணப்படும்.
இலுப்பை மரத்தின் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது ஆகும்.  இலுப்பை மரத்தில் உள்ள மருத்துவகுணங்களைக் காணலாம்.

தாய்பால் நன்றாக சுரக்க – Madhuca Tree Benefits

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியமாகும். ஆனால், சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரக்காத காரணத்தால் மிகவும் அவதிப்படுவதுண்டு. இனி தாய்மார்கள் கவலை கொள்ள வேண்டும். இலுப்பை இலையை பறித்துக்கொள்ளவும். பறித்த இலைகளை  மார்பில் வைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்

வீக்கம் – Madhuca Tree Benefits

இலுப்பை விதையை எடுத்துக்கொள்ளவும். அதன் ஓட்டை நீக்கிக்கொள்ளவும். உள்ளே பருப்பானது இருக்கும். அந்த பருப்பை வதக்கிக்கொள்ளவும். பின்னர், அதனை  அரைத்து வீக்கங்களுக்கு மீது தடவினால் வீக்கமானது குணமாகும்.

Madhuca tree benefits

வெண்படலம் – Madhuca Tree Benefits

இலுப்பைக் காயை எடுத்துக்கொள்ளவும். அதனை கையால்  கீறினால் பால் வெளிப்படும். இதனை, வெண்படலத்தின் மீது தடவினால், வெண்படலம் குணமாகும். பின்னர், தோல் சார்ந்த நோய்கள் அனைத்துமே பறந்தோடும்.

மலச்சிக்கல் – Madhuca Tree Benefits

மக்கள் பெரிதும் மலச்சிக்கலால் அவதிப்படுவதுண்டு. அவர்கள் இலுப்பை  பழங்களைச் சேகரித்து, சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். வயிறு சார்ந்த கோளாறு அனைத்தும் நீங்கும்.

தோல் சார்ந்த நோய்கள் – Madhuca Tree Benefits

இலுப்பை பிண்ணாக்கை  ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர், அதனை நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு,  வடிகஞ்சியுடன் கலந்து உடலில் தேய்த்துக்  கொள்ளவும். சிறிது நேரம் ஊற வைத்து குளித்தால் தோல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

காய்ச்சல் – Madhuca Tree Benefits

இலுப்பையின் வேரைச் சேகரித்துக்கொள்ளவும்.அந்த வேரை காய வைத்துக்கொள்ளவும்.  பின்னர், நன்றாக இடித்துக்கொள்ளவும். பிறகு,  நீரில் கலந்து கொதிக்கவைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

இதையும் படிக்கலாமே-

  1. மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள் -Mookirattai Keerai Benefits
Share this post

1 thought on “இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள்- Madhuca Tree Benefits”

  1. Pingback: மருத மரத்தின் மருத்துவப் பயன்கள்... -marutha maram benefits

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top