கால் ஏற்பட்டுள்ள ஆணியைக் குணப்படுத்தும் சில வீட்டு வைத்தியம்Kaal Aani

Kaal Aani

Kaal Aani-பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல  தோன்றி பாதத்திற்கு மிகுந்த வலியைக் கொடுப்பது கால் ஆணியின் அறிகுறியாகும். உடல் பருமனால் கால் ஆணி ஏற்படுகிறது. காலுக்கு சரியில்லாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்துவதால் கால் ஆணி ஏற்படுகிறது. மேலும், வெறும் காலில் நடப்பதால் கால் ஆணி வரக்கூடும். கால் ஆணியானது  வலியையும், துன்பத்தையும் தரக்கூடியது ஆகும். காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு மிகுதியான வலி ஏற்படும்.

கால் ஆணி குணமாக

மருதாணி – kaal aani treatment in tamil

ஒரு கைப்பிடியளவு மருதாணி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அத்துடன், மஞ்சள், வசம்பு ஆகியவற்றை அரைத்துக்கொள்ள வேண்டும். கால் ஆணி உள்ள இடத்தில் இந்த அரைத்த விழுதை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் கட்ட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கால் ஆணியானது குணமாகும்.

பூண்டு – kaal aani treatment in tamil

பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளவும். அதனை, தோல் நீக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்த சாறை கால் ஆணி மீது தடவி வந்தால், கால் ஆணியானது குணமாகும். தொடர்ந்து இவ்வாறு செய்தால், கால் ஆணியானது முழுவதுமாக குணமாகும்.

சித்திரமூலம் – kaal aani treatment in tamil

சித்திரமூலம் வேர்ப்பட்டையைச் சேகரித்துக்கொள்ளவும். இந்த வேர்ப்பட்டையை நன்றாக காய வைத்துக்கொள்ளவும். பின்னர், பொடியாக்கி, அரைத்து கால் ஆணி மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும்.

விளக்கெண்ணெய் – kaal aani treatment in tamil

விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். அத்துடன், மஞ்சள் மற்றும் வசம்பு கலந்துக்கொள்ளவும். இதனை, கால் ஆணியின் மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும்.

அம்மான் பச்சரிசி – kaal aani treatment in tamil

அம்மான் பச்சரிசியை நன்றாக உடைத்துக்கொள்ளவும். அதனை, தேங்காய் எண்ணெயுடன் கலந்துக்கொள்ளவும். இந்தகலவையை கால் ஆணியின் மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும்.

மல்லிகை – kaal aani treatment in tamil

மல்லிகைச் செடியின் இலையை  எடுத்துக்கொள்ளவும். அதனை, அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை கால் ஆணியின் மீது தடவி வரவேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் கால் ஆணியானது முழுவதுமாக குணமாகும். கால் ஆணியால் வரக்கூடிய வலி உடனடியாக குணமாகும்

இதையும் படிக்கலாமே

மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் பறந்தோடும் இந்த கற்றாழை செடியால் – Aloe Vera Benefits in Tamil

கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top