தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள் போதும்-How to increase breast milk

பால் சுரக்க

குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியானது உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். போதிய அளவு பால் சுரக்காமல் இருப்பதால் தாய்மார்கள் அவதிப்பட வாய்ப்புண்டு. பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி காண்போம்.

முட்டை

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. தாய்மார்கள் முட்டையைச் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றகாக சுரக்கும். முட்டையில் வைட்டமின் ஏ, பி2, பி12, ஒமேகா 3 , கால்சியம் முதலிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. தாய்மார்கள் அவசியம் முட்டை சாப்பிடுதல் வேண்டும். இதன் மூலம் தாய் மற்றும் சேய் உடல் உறுதியுடன் இருப்பார்கள்.

முருங்கை கீரை

முருங்கை கீரையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பால் நன்றாக சுரக்கும். முருங்கை கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கேரட்

 கேரட்டை வேக வைத்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். கேரட்டில் கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.  கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

பூண்டு

பூண்டை குழம்பில் அதிக அளவு சேர்த்துக்கொண்டால் நன்றாக பால் சுரக்கும்.   பூண்டை வேக வைத்து குடித்து வந்தாலோ, வேக வைத்த பூண்டைப் பாலுடன் கலந்து குடித்தலோ நன்றாக பால் சுரக்கும். பூண்டில் வைட்டமின் சி, பி6, மாங்கனீஷ் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

பால்

காலை, மாலை, இரவு மூன்று வேலையும் பாலைக் காய்ச்சி பருக வேண்டும். பால் பருகி வந்தால் நன்றாக பால் சுரக்கும். பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பை ஊற வைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நன்றாக பால் சுரக்கும். மேலும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பாதாம் பருப்பானது பால் சுரப்பதை அதிகரிக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ உள்ளது. பாதாமில் கால்சியம் வைட்டமின் பி 17 ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

பாகற்காய்

பாகற்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் பால் நன்றாக சுரக்கும். கசப்பு சுவை உடைய பாகற்காயை குழம்பாகவும், பொரியலாகவும் செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும். பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் , சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற பல சத்துகள் உள்ளன. பாகற்காய் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. 

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்புச் சத்து உள்ளது. பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் உடல் பலமாக இருக்கும். தாய்பால் நன்றாக சுரக்கும்.

மீன்

பால் சுறா மற்றும் கார மீனை குழம்பாக செய்து சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். உணவில் மீனை அதிகளவு செய்து கொள்வது நல்லது. மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துகள் நிறைந்து காணப்படுகிறது

தண்ணீர்

தாய்மார்கள் தண்ணீரை அதிகளவு குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகளவு குடித்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் வரை சுடத்தண்ணீரைக் குடிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே –

கண்டங்கத்திரி குழம்பு, கண்டங்கத்திரி  தீயல், கண்டங்கத்திரி ரசம் போதும் சளி, இருமல், சுவாசக்கோளாறு பிரச்சனையே இருக்காது- Kandankathri kuzhambu, Kandankathri theeyal, Kandankathri rasam…

Share this post

1 thought on “தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள் போதும்-How to increase breast milk”

  1. Pingback: கை, கால், இடுப்பு பகுதியில் உள்ள கருமை நீங்க இதை செய்யுங்கள் போதும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top