பயணத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தி கட்டுக்குள் வர இத செய்யுங்க போதும்-How to control vomit during travel
பயண காலத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தியானது நமது ஒட்டுமொத்த பயணத்தையும், இரசிக்கவிடாமல் செய்துவிடும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை வாந்தி எடுத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைசுற்றல் ஏற்படும். பயணத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய சில எளிய வழிகளைக் காண்போம்.
இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை பையில் வைத்திருப்பது நல்லது. இஞ்சியை வாயில் போட்டு மென்று தின்றால், வாந்தி குறையும். பயணத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தியைக் கட்டுப்படுத்த இந்த இஞ்சி போதும். நாம் நமது பயணத்தைச் சுவாரசியமாக ரசிக்கலாம். இஞ்சியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இஞ்சியானது பசியுணர்வை அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவி வந்தால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சைப் பழத்தின் வாசனையை முகர்ந்து பார்த்து வந்தால் வாந்தி உணர்வு கட்டுக்குள் வரும். எலுமிச்சைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் உப்பு கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
ஏலக்காய்
ஏலக்காயை கையில் வைத்திருந்தால் போதும், வாந்திக்கு பயபட தேவையில்லை. ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வாயு கோளாறு நீங்கும். ஏலக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
கிராம்பு
கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாந்தி உணர்வு குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனை குணமாகும். கிராம்பில் கார்போ ஹைட்ரேட், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகிய சத்துகளை உள்ளடக்கி உள்ளது.
இதையும் படிக்கலாமே –
புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்-Cancer
Pingback: புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்-Cancer