காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever…

காய்ச்சல்

மனித உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது காய்ச்சலாக மாறுகிறது. காய்ச்சலின் போது சாப்பிட பிடிக்காது.  வாய் கசப்பாக இருப்பதால் உணவை உட்கொள்ள முடியாது. காய்ச்சலின் போது உணவைத் தவிர்த்தால், சோர்வு மற்றும் எடை இழப்பு ஏற்படும். எனவே, காய்ச்சலின் போது அவசியம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி

இஞ்சியைத் தோல் சீவி எடுத்துக்கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும்.  அத்துடன் ஏலக்காய், தேன், உலர் திராட்சை போட்டு கொதிக்கவிட்டு, பின்னர், வடிகட்டி குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

பழச்சாறு

காய்ச்சலின் போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழச்சாறைப் பருகி வந்தால், உடலுக்கு பலம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காய்கறிகள்

பீட்ரூட், பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறியைச் சிறிதாக நறுக்கி நன்றாக வேக வைத்து, அத்துடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

கஞ்சி

அரிசியை வேகவைத்து அத்துடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி தழைகளைக் கலந்து குடித்தால் உடல் வலிமையாக இருக்கும்.

பிரெட்

காய்ச்சலின் போது பிரெட்டைச் சாப்பிடலாம். பிரெட்டைப் பாலில் தொட்டு சாப்பிடலாம். பிரெட்டைத் தொடர்ந்து மூன்று நாளுக்கு மேல் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும். வெந்நீரைக் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்-Pregnancy women food…

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top