இரத்த அழுத்தம் குறைய இதை செய்தால் போதும்-Blood pressure

இரத்த அழுத்தம் குறைய

பெரும்பாலும் இரத்த அழுத்தத்தால் மிகவும் பாதிப்படைக்கின்றனர். எண்ணெய் பொருட்களை அதிகம் சாப்பிடுதல் உணவில் உப்பு, சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகச் சேருதல் ஆகிய காரணங்களால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால். உயர் இரத்த அழுத்தமானது ஏற்படுகிறது. சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொண்டால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இறைச்சி

இரத்த அழுத்தம் வராமல் தடுக்க அசைவ உணவுகளைக் குறைவாக எடுத்துகொள்ள வேண்டும். கோழி, ஆடு, மாட்டு  இறைச்சிகளை மிக குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

புகை பழக்கம்

புகைப்பிடிப்பதால் தனக்கு மற்றும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், இயற்கைகள் என அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புண்டு. புகைப் பிடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கி விடும். இதனால், இரத்த அழுத்தமானது ஏற்படும். எனவே, புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தம்

தேவைய்ற்ற சிந்தனை, கவலை, பணிசுமை ஆகியவை நம் மனதைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது மனதைப் புத்துணர்வாக வைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். மனதைப் புத்துணர்வாக வைத்துக்கொள்ள இயற்கை காட்சிகளைக் இரசிக்கலாம். புத்தகத்தைப் படிக்கலாம். பாடல்களைக் கேட்கலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். இதனால், மன அழுத்தம் குறையும். அதன் மூலம் உயர் இரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புண்டு.

இதையும் படிக்கலாமே –இரத்த அழுத்தம் குறைய இதை சாப்பிடுங்க போதும்-Blood pressure

உப்பு

உடலில் அதிகளவு உப்பு சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமையலில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சமையலில் இந்துப்புவைச் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.

இனிப்பு

இனிப்பு பொருட்களை அதிகம் உட்கொள்ள கூடாது. இனிப்பு பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு பொருட்களைக் குறைத்துக்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

எண்ணெய்

பெரும்பாலும் மக்கள் உணவில் அதிகளவு எண்ணெயைச் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால், உடலில் எண்ணற்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெயில் பொரித்த, வறுத்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தேநீர்

டீ, காபி முதலியவற்றைக் குறைவாக குடிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதிகளவு டீ, காபி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Share this post

2 thoughts on “இரத்த அழுத்தம் குறைய இதை செய்தால் போதும்-Blood pressure”

  1. Pingback: இரத்த அழுத்தம் குறைய இதை சாப்பிடுங்க போதும்-Blood pressure

  2. Pingback: கௌரி பஞ்சாங்கம் இன்றைய நல்ல நேரம்…- Gowri panchangam parkum murai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top