அட்சய திருதியை பூஜை செய்யும் முறை -Akshaya tritiya in tamil
அட்சய திருதியை பூஜை செய்யும் முறை
அட்சய திருதி அன்று அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். பூஜை அறையில் கோலமிட வேண்டும். கோலத்தின் மேல் வாழையிலை வைக்க வேண்டும். பின்னர் பச்சரிசி பரப்பி ஒரு சொம்பு நீர் நிரப்பி, மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தின் பக்கத்தில், ஒரு படியில் நெல் நிறைந்த படி வைக்க வேண்டும்.
கலசத்திற்கு பொட்டு வைத்து, லட்சுமி நாராயணன் படத்திற்கு பொட்டு மற்றும் பூ வைத்து குத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். அட்சய திருதி அன்று வீட்டில் பல்லியை பார்த்தால், ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும். பல்லியை கண்டவுடன் வணங்கி, மனதில் வேண்டுதலை வைக்க வேண்டும். அவ்வாறு, செய்வதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
அட்சய திருப்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்
அட்சய திருப்தி அன்று வாங்க வேண்டிய பொருட்கள் பருப்பு வகைகள், கீரை , காய்கறிகள், அரிசி, உப்பு, மஞ்சள், பூ ஆகியவற்றை வாங்க வேண்டும் .
அட்சய திருதி அன்று தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்
அட்சய திருதி அன்று தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள் வெப்பத்தை தணிக்க கூடிய வகையில் உடை, குடை, பானகம், நீர், மோர், விசிறி ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.
தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வத்தை பெறலாம் .
நோயால் அவதிப்படுவதற்கு மருத்துவ உதவி வழங்குவதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.
நல்ல ஆடையை கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் நிலையான செல்வத்தை பெறுவீர்கள்.
தயிர் சாதம் தானமாக கொடுத்தால், வீட்டில் மகாலட்சுமி மகிழ்ச்சியுடன் வாழ்வாள்.
இனிப்பு பொருட்கள் தானம் செய்வதன் மூலம் திருமண தடைகள் நீங்கும்.
அரிசி, கோதுமை பொருட்களை தானமாக அளித்தால், விபத்துக்கள் நேராது.
அன்னதானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் நல்ல வாழ்க்கை வளம் அடைவீர்கள்.
இதையும் படிக்கலாமே
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் – 27 Nakshatra god in tamil
மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil