சைனஸ் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Sainas
சைனஸ் தொல்லையால் பெரிதும் மக்கள் பாதிப்படைகின்றனர் மூக்குப்பகுதியில் பாலிப் என்னும் சதை வளர்வதால் சைனஸ் பிரச்சனை ஏற்படுகிறது. சைனஸை சில எளிய முறைகள் மூலம் குணப்படுத்தலாம்.
காலநிலை மாற்றம், மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பது, தொற்று, சளி ஆகியவற்றின் காரணமாக சைனஸ் ஏற்படுகிறது.
மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், கழுத்து வலி, தோள்பட்டை வலி, தலைசுற்றல், தொண்டை வலி, தலைவலி ஆகியவை சைனஸால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.
புழுதி காற்று வீசும் இடத்தைவிட்டு விலக வேண்டும். புழுதி காற்று வீசும் இடத்தில் நிற்பதையோ, அமர்வதையோ தவிர்க்க வேண்டும்.
மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். பனியில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மழையில் நனைந்தால், தலையை நன்றாக துடைக்க வேண்டும்.
வீட்டில் அழுக்கு, ஒட்டடை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒட்டடை அடிக்கும்போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது நல்லது.
செல்ல பிராணிகளின் முடி உதிர்வை சுத்தம் செய்ய வேண்டும். செல்ல பிராணிகளின் முடியானது நாம் சுவாசிக்கும் போது நம் மூக்கில் நுழைய வாய்ப்புண்டு. எனவே, முடி உதிர்வை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
புகை காற்றை சுவாசிக்கக் கூடாது. குளிர்பானம், ஐஸ்கீரிம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. உடற்பயிற்சி, யோகா, தியானம் முதலியவற்றைச் செய்து உடலையும், மனதையும் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே –
தலையில் நீர் கோர்த்தல் குணமாக சில டிப்ஸ்-Thalaiyil neer korthal
Pingback: தலையில் நீர் கோர்த்தல் குணமாக சில டிப்ஸ்-Thalaiyil neer korthal