மன அழுத்தம் குறைய நாம் செய்ய வேண்டியது-Stress relief activities
மன அழுத்தம் அறிகுறிகள்
இதயம் வேகமாக துடித்தல், படபடப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறியாகும். மன அழுத்தம் உடலில் பலவிதமான எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். மன அழுத்தத்தால் பல வகையான நோய்கள் வர வாய்ப்புண்டு.
படபடப்பு குறைய வழிகள்
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். காலையில் எழுந்தவுடன், உடற்பயற்சி செய்ய வேண்டும். காற்றோட்டம் மிக்க இடத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சிறிய வேலையாக இருந்தால்கூட திட்டமிட்டு செய்தால் மன அழுத்தம் குறையும். அடுத்த நாள் வேலையை முதல் நாளே திட்டமிட்டு செயல்பட்டால் போதும் மன அழுத்தமானது குறையும்.
வேலைக்கு இடையே சிறிது நேரமாவது ஒய்வு எடுத்துக்கொள்வது நமது உடல் மற்றும் மனதிற்கு தேவையான ஒன்றாகும்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்நேரத்தில் மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்ய வேண்டும். தொடர்ந்து பணியில் முழ்கி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இயற்கையை ரசிப்பது, குழந்தைகளிடம் விளையாடுவது, புத்தகம் படிப்பது என மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்ய வேண்டும்.
காலையிலும், மாலையிலும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மனம், உடல் இரண்டையும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதையும் படிக்கலாமே –
இந்த உணவுகள் போதும் பித்தம் சார்ந்த பிரச்சனை பறந்தோடும்-Pitham
Pingback: கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இது தெரியாமப் போச்சே-Kandankathri