மாலைக்கண் நோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்-Malai kan
வைட்டமின் ஏ குறைபாட்டால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இரவு நேரம் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் பார்வை மங்கலாக தெரிவது மாலை கண் நோயின் அறிகுறியாகும்.
வைட்டமின் ஏ நிறைந்த
மாலைக் கண் நோயைக் குணப்படுத்த வைட்டமின் ஏ நிறைந்த அரைக்கீரை, கேரட், குடைமிளகாய், சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, மாம்பழம், முட்டை, வெண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
செவ்வாழை
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோயைக் குணமாக்கும். இரவு உணவுக்குப் பின்னர், செவ்வாழையைச் சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடு நீங்கும்.
பேரிச்சம்
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடு நீங்கும்.
வைட்டமின் ஏ
கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது. கேரட்டை பச்சையாகவும், சமையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகும்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஆரஞ்சைப் பழமாகவோ, பழச்சாறாகவோ பருகி வந்தால், பார்வை தெளிவாகும். ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவாகும்.
அரைக்கீரை
அரைக்கீரையைப் பொரித்தோ, குழம்பாகவோ செய்து சாப்பிட்டு வந்தால், பார்வை குறைபாடு நீங்கும். பார்வைத் தெளிவாகும்.
இதையும் படிக்கலாமே –
நீர் சுருக்கு பிரச்சனை இனி வரவே வராது- Neer surukku home remedies