குழந்தையைத் தூங்க வைப்பது எப்படி?…
குழந்தையைத் தூங்க வைப்பது என்பது ஒரு கைசிறந்த கலையாகும். அழுகின்ற குழந்தையைத் தூங்க வைக்க சில வழிகளைக் காண்போம்.
குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்து, தாலாட்டு பாடுவதன் மூலம் உறங்கும்.
குழந்தையைத் மடியில் கிடத்தி, கதையைக் கூறினால் சில குழந்தைகள் உறங்கும்.
குழந்தையின் தலையை நீவி கொடுத்தால் சில குழந்தைகள் உறங்கும்.
குழந்தையின் உச்சந்தலையிலிருந்து மூக்கு வரை உங்கள் கையால் மெதுவாகத் தடவிக் கொடுத்தாலும், புருவத்தில் மெதுவாகத் தடவிக் கொடுத்தாலும் சில குழந்தைகள் உறங்கும்.
குழந்தையைத் மடியில் கிடத்தி, குழந்தையின் தலையை நீவி கொடுத்துக் கொண்டே , மின்விசிறியைத் தொடர்ந்து பார்க்கச் செய்தாலும் சில குழந்தைகள் உறங்கும்.