கீழாநெல்லியின் மருத்துவக்குணங்கள்-Keelanelli Benefits In Tamil
Keelanelli Benefits In Tamil- கீழாநெல்லி மற்றும் மேலா நெல்லி இரண்டுமே மருத்துவக்குணம் வாய்ந்த செடியாகும். இவற்றின் இலைகள் ஈரடுக்கில் இருக்கும். இலையின் கீழே மலர்களும், காய்களும் இருந்தால் அது கீழாநெல்லியாகும். இலையின் மேலே மலர்களும், காய்களும் இருந்தால் அது மேலாநெல்லியாகும். கீழ்வாய் நெல்லி மற்றும் கீழ்க்காய் நெல்லி என்று கீழாநெல்லிக்குப் பல பெயர் உண்டு.
கீழாநெல்லியின் பயன்கள்
எரிச்சல்
மேலாநெல்லிச் செடியைப் பறித்து சுத்தம் செய்துக்கொள்ளவும். பின்னர், இதனை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
கீழாநெல்லி உண்ணும் முறை -கீழாநெல்லி சாறு
மலச்சிக்கல்
மேலாநெல்லிச் செடியின் இலைகளைப் பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன், தேன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மஞ்சள் காமாலை நோய்
கீழாநெல்லி இலையைப் பறித்து சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதனை அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனை, மோருடன் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
உடல் உஷ்ணம்
கீழாநெல்லி வேரை காய வைத்துக்கொள்ளவும். பின்னர், பொடியாக்கிக்கொள்ளவும். இந்த பொடியைப் பாலுடன் கலந்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
காயம்
கீழாநெல்லி இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை, அரைத்து காயத்தின் மீது தடவி வந்தால் காயம் குணமாகும்.
விஷங்கள்
கீழா நெல்லி இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை, நன்றாக சுத்தம் செய்து சாப்பிட்டு வர கொடிய விஷங்கள் கூட மறையும்.
கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள்
கீழாநெல்லி வேர் மற்றும் வேப்பிலை இலையைக் காய வைத்து பொடியாக்கிக்கொள்ளவும். இதனை, பாலில் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள்
கீழாநெல்லி இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை, தண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். இந்த தண்ணீர் சுண்டவுடன் வடிக்கட்டி குடித்து வந்தால் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
தோல் சார்ந்த நோய்கள்
கீழாநெல்லி இலையைப் பறித்துக்கொள்ளவும். அதனை, அரைத்துக்கொள்ளவும். அத்துடன், உப்பு சேர்த்து சொறி, சிரங்கு உள்ள இடத்தில் தடவினால் தோல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
தலைவலி
கீழாநெல்லி வேர்ப்பொடி மற்றும் சீரகப்பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
இதையும் படிக்கலாமே
செம்பருத்தி மலரின் மருத்துவக்குணங்கள்- செம்பருத்தி பூ பயன்கள்-Sembaruthi