30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? -உடல் எடை குறைய உணவு அட்டவணை
உடல் எடை குறைய உணவு அட்டவணை- உடல் எடையைக் குறைக்க – உடல் உழைப்பில்லாத வேலை, உடற்பயிற்சி செய்யாமை, சீரற்ற உணவு பழக்கம், இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகளவு சாப்பிடுதல், மதியம் உறங்குதல் போன்ற காரணங்களால் உடல் எடையானது அதிகரிக்கின்றது. உடல் எடையால் பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காசு நிறைய செலவு செய்தும் உடல் எடை குறையவில்லையா? உடல் எடையைக் குறைக்க சில எளிமையான வழிகள் உங்களுக்காக…
உடல் எடை குறைய உணவு அட்டவணை (டயட் உணவு அட்டவணை)
Day 1 -உணவு அட்டவணை
காலை உணவாக இட்லி, சாம்பார் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவாக கைக்குத்தல் அரிசி சாதம், பருப்பு குழம்பு ,வேக வைத்த காய்கறிகள், முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் .இரவு உணவாக கோதுமை மாவு சப்பாத்தி மற்றும் காய்கறி குருமாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Day 2 -உணவு அட்டவணை
காலை உணவாக இட்லி மற்றும் கீரை சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவாக சிறுதானிய உணவு மற்றும் சிவப்பு அரிசி சாதம் ,காய்கறி கூட்டு மற்றும் சிறிதளவு மோரை எடுத்துக் கொள்ள வேண்டும், இரவு உணவாக இட்லி மற்றும் சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும் .
Day 3 -உணவு அட்டவணை
காலை உணவாக இடியாப்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவாக கைக்குத்தல் அரிசி சாதம் , கீரை கூட்டு ,காய்கறி அவியல் ,தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவாக சப்பாத்தி மற்றும் சட்னி எடுத்துக் கொள்ள வேண்டும் .
Day 4 -உணவு அட்டவணை
காலை உணவாக இட்லி மற்றும் கொத்தமல்லி சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவாக சிறு தானிய உணவு மற்றும் பருப்பு குழம்பு, வேகவைத்த முட்டை, மோர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவாக சப்பாத்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Day 5 -உணவு அட்டவணை
காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இணையாக புதினா சட்னி எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவாக சிவப்பு கவுனி அரிசி சாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக இடியாப்பம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Day 6 -உணவு அட்டவணை
காலை உணவாக இடியாப்பம் மற்றும் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும் . மதிய உணவாக புழுங்கல் அரிசி சாதம் மற்றும் காய்கறி அவியல், மோராகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவாக சப்பாத்தி எடுத்துக்கொள்ள வேண்டும் .
Day 7 -உணவு அட்டவணை
காலை உணவாக கோதுமை உப்புமாவை எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவாக சிறுதானிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இணையாக காய்கறி கூட்டு, பருப்பு கடையல் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவாக சப்பாத்தி மற்றும் புதினா சட்னி எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் (உடல் எடையை குறைப்பது)
தண்ணீரை அதிகளவு குடிக்க வேண்டும். தண்ணீரானது உடலில் தேவையற்று தேங்கியிருக்கும் நச்சு மற்றும் கொழுப்புகளை வெளியேற்றும்.
காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பதாலும் சிலருக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மதிய உணவில் காய்கறிகளை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு கொஞ்சமாக இருப்பது நல்லது. இரவு வேளையில் செரிமானம் பொறுமையாக நடக்கும்.
ஒவ்வொரு முறை உணவுக்கு பின்னரும் கதகதப்பான தண்ணீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
துணி துவைக்கும் இயந்திரம், லிப்ட் இவைகளுக்கு விடுமுறையை கொடுப்பது அவசியம். வேலை நேரத்தில் சிறிது நேரம் எழுந்து நடக்க வேண்டும். காலை மற்றும் மாலை ஓய்வு நேரங்களில் செல்போனுக்கு, ஓய்வு கொடுத்துவிட்டு சுத்தமான இயற்கை காற்றை வாங்கிக்கொண்டு நடக்க வேண்டும்.
சுரக்காயைச் சிறு சிறு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இந்த சுரக்காயுடன் சீரகம், மிளகு, கருவேப்பிலை, உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை வடிகட்டி இத்துடன் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
புதினா, எலுமிச்சை, இஞ்சி இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் இதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
தானிங்களை வேகவைத்து, அவற்றை இரவு நேர உணவாக எடுத்துக்கொண்டால், உடல் எடை குறையும்.
கொத்தமல்லி மற்றும் இலவங்கப்பட்டையைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டிக்கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக வேக வைத்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி விதை, இஞ்சி, கருமிளகு, சோம்பு, ஓமம், இலவங்கம் இவற்றை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.
இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
கீரை, வாழைத்தண்டு, முருங்கைக்காய், பாகற்காய் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.
கறிவேப்பிலை இலையை வெறும் வாயில் போட்டு மென்னு, தின்றால் உடல் எடை குறையும். கறிவேப்பிலையைக் காய வைத்து பொடியாக்கி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
இதையும் படிக்கலாமே
காது வலி நீங்க பாட்டி வைத்தியம்- Kathu Vali Treatment
மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் பறந்தோடும் இந்த கற்றாழை செடியால் – Aloe Vera Benefits in Tamil