கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam
கண் எரிச்சல் குணமாக – kan Erichal Nattu Maruthuvam -உடல் சூட்டினால் கண் எரிச்சலானது ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர செல்போன் மற்றும் கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கண்ணில் வறட்சி ஏற்பட்டு அதனாலும் கண் எரிய வாய்ப்புண்டு. கண் எரிச்சலைக் குணப்படுத்தும் வழிகளைக் காணலாம்.
கண் எரிச்சல் குணமாக – Eye Problems in Tamil
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும். மேலும், புளிய மரத்தின் இலைகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இவற்றை நல்லெண்ணயில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.
நல்லெண்ணய்
நல்லெண்ணயைத் தலைக்குத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வந்தால், உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.
முள்ளங்கி
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சீரகப் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை ஆகியவை குணமாகும்.
வெந்தயம்
வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதனை, நன்றாக அரைத்து தலைக்குக் குளித்து வந்தால், உடல் சூடு குறையும். அதன் மூலம் கண் எரிச்சலானது குணமாகும்.
நீண்ட நேரம் கணினி மற்றும் செல்போனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களுக்கு சிறிது நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளங்கையைத் தேய்த்து வெதுவெதுப்பாகி கண்ணில் ஒற்றி எடுக்க வேண்டும்.
இமைக்காமல் நீண்ட நேரம் கணினியைப் பார்ப்பதால் கண்கள் வறண்டு போகும். 20 நிமிடங்களில் 10 முறையாவது கண்களை இமைக்க வேண்டும். குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கணினி மற்றும் செல்போன் பிரைட்னஸ் அளவை உங்கள் கண்களுக்கு ஏற்றவாறு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அறையில் ஜன்னல் மற்றும் கணினி , லைட் இவ்வாறு வெளிச்சம் கூடுதலாக இருந்தால் அவற்றில் ஏதாவது ஒன்றைத் தவிர்க்க வேண்டும்.
பழச்சாறுகளை அவ்வப்போது குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் உஷ்ணம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர்சாதன அறையில் நீண்ட நேரம் வேலை செய்வதாலும் கண்கள் வறண்டு போகும். எனவே, குளிர்சாதன அறையில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க் வேண்டும்.