27 நட்சத்திரங்களின் வேறு பெயர்கள்…

27 நட்சத்திரங்களின் வேறு பெயர்கள்

அஸ்வினி நட்சத்திர வேறு பெயர்கள் பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி.

பரணி நட்சத்திர வேறு பெயர்கள் கிழவன், சோறு, பகலவன், தராசு, தாழி, தருமனாள், அடுப்பு, பூதம், தாசி, முக்கூட்டு.

கிருத்திகை நட்சத்திர வேறு பெயர்கள் எரிநாள், ஆரல், இறால், அறுவாய், அளக்கர், நாவிதன், அங்கி, அளகு.

ரோகிணிநட்சத்திர வேறு பெயர்கள் பிரமனாள், சகடு, பண்டி, சதி, வையம், மருள். விமானம், தேர், ஊற்றால், உரோணி.

மிருகசீரிடம் நட்சத்திர வேறு பெயர்கள் திங்கள் நாள், மதி, பேராளன், மான் தலை, மாழ்கு, மார்கழி, மும்மீன், நரிப்புறம், பாலை.

திருவாதிரை நட்சத்திர வேறு பெயர்கள்செங்கை, மூதிரை, யாழ், ஈசன்தினம்.

புனர்பூசம் நட்சத்திர வேறு பெயர்கள் அதிதி நாள், கழை, புனர்தம், கரும்பு, புனிதம், பிண்டி, ஆவணம்.

பூசம் நட்சத்திர வேறு பெயர்கள் குரு நாள், கொடிறு, வண்டு, காற்குளம்.

ஆயில்யம் நட்சத்திர வேறு பெயர்கள் அரவு நாள், கௌவை, பாம்பு, ஆயில்.

மகம் நட்சத்திர வேறு பெயர்கள் கொடுநுகம், வேள்வி, வாய்க்கால், வேட்டுவன், மாசி, முதலில் வரும் சனி.

பூரம் நட்சத்திர வேறு பெயர்கள் இடையில் வரும் சனி, தூர்க்கை, எலி, பகவதி நாள், நாவிதன், கணை.

உத்தரம் நட்சத்திர வேறு பெயர்கள் பங்குனி, கடையில் வரும் சனி, செங்கதிர் நாள்.

அஸ்தம் நட்சத்திர வேறு பெயர்கள் காமரம், அங்கிநாள், கௌத்துவம், கைம்மீன், களிறு, நவ்வி, ஐவிரல்.

சித்திரை நட்சத்திர வேறு பெயர்கள் நெய், பயறு, மீன், அறுவை, ஆடை, தூசு, நடுநாள், தச்சன், துவஷ்டா நாள்.

சுவாதி நட்சத்திர வேறு பெயர்கள் விளக்கு, மரக்கால், வீழ்க்கை, வெறுநுகம், காற்றினாள், காற்று, தீபம்.

விசாகம் நட்சத்திர வேறு பெயர்கள் முற்றில், வைகாசி, காற்று நாள், முறம், சுளகு, சேட்டை.

அனுசம் நட்சத்திர வேறு பெயர்கள் புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்ர நாள்.

கேட்டை நட்சத்திர வேறு பெயர்கள் சேட்டை, இந்திர நாள், வேதி, தழல், எரி, வல்லாரை.

மூலம் நட்சத்திர வேறு பெயர்கள் தேள்கடை, குருகு, கொக்கு, சிலை, அன்றில், ஆனி, அசுரநாள்.

பூராடம் நட்சத்திர வேறு பெயர்கள் உடைகுளம், முற்குளம், நீர்நாள்.

உத்திராடம் நட்சத்திர வேறு பெயர்கள் கடைக்குளம், ஆனி, விச்சுநாள், ஆடி.

திருவோணம் நட்சத்திர வேறு பெயர்கள் மாயோனாள், உலக்கை, முக்கோல், சிரவணம், சோணை.

அவிட்டம் நட்சத்திர வேறு பெயர்கள் காகப்புள், அசுக்கணாள். பறவை, புள், ஆவணி.

சதயம் நட்சத்திர வேறு பெயர்கள் செக்கு, சுண்டன், போர், குன்று, வருண நாள்.

பூரட்டாதிநட்சத்திர வேறு பெயர்கள் முற்கொழுங்கால், நாழி, புரட்டை.

உத்தரட்டாதி நட்சத்திர வேறு பெயர்கள் முரசு, பிற்கொழுங்கால், மன்னன்,

ரேவதி நட்சத்திர வேறு பெயர்கள் இரவிநாள், கலம், தோணி, தொழு, நாவாய், கடைநாள், சூலம், பெருநாள்.

இதையும் படிக்கலாமே

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் – 27 nakshatra symbols in tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top