ராசிக்கு ஏற்ப வாசற்கால் – எந்த திசையில் வாசற்கால் அமைய வேண்டும்…?
ராசிக்கு ஏற்ப வாசற்கால் –Vastu Tips In Tamil: எப்படி ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டியது முக்கியமோ, அதேப் போல் அந்த வீட்டின் நுழைவாயில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் வீட்டின் நுழைவாயின் வழியாகத் தான், அந்த வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் நுழைந்து, அந்த வீட்டில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்குகிறது. எனவே ஒரு வீட்டின் நுழைவாயில் மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதுவும் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் நுழைவாயில் திசையானது, அந்த வீட்டில் உள்ளோரின் ராசிக்கேற்ப இருந்தால், அது இன்னும் பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த திசை பார்த்த வீட்டில் இருப்பது நன்மை பயக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசிக்கு எந்த திசை வீடு சரியாக இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும்.
6 – அடி நன்மை, 7 – அடி தரித்திரம், 8 – அடி நல்ல பாக்கியம் தரும், 9 – அடி கெடுதல் தரும், 10 – அடி ஆடுமாடு சுபிட்சம், 11 – அடி பால்பாக்கியம், 12 – அடி விரோதம், செல்வம் குறையும், 13 – அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம் பெற்று வாழ்வார்.
ராசிக்கு ஏற்ப வாசற்கால்:
ரிஷபம, மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்
வீடு கட்ட வேண்டிய மாதங்கள்:
வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உத்தமம் ஆகும்.
மேஷ ராசியினர் மேற்கு தலை வாசல் வீடு கட்டுவது மிக சிறந்த பலனை தரும் அதே சமயம் தென் மேற்கு திசையில் தலைவாசல் அமைந்த விடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
கும்ப மீன ராசியில் பிறந்தவர்கள் வீட்டின் தலை வாசலை மேற்கு திசையில் அமைப்பது மிகவும் சிறப்பு. அப்படி மேற்கு திசையில் அமைப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பல்வேறு வகையில் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
சூரியனின் ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசியினர் வீட்டின் பிரதானமான வாசலை கிழக்கு பக்கம் வைப்பது சிறப்பு. அப்படி கிழக்கு திசையில் வைக்கும்போது செல்வமும், சகல சம்பத்துகளும் வீட்டில் நிலைத்திருக்கும். அப்படி கிழக்கு திசையில் அமைக்க வாய்ப்பு இல்லையெனில் மேற்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம்.
துலாம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசையில் வாசல் வைப்பது மிகவும் உத்தமம். கிழக்கு திசை நோக்கி வாசல் அமைக்கும் போது, உங்கள் வாழ்வே செல்வம் குறையாமல் எப்போதும் சிறப்பாக வாழ்வீர்கள்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை சிறப்பானது. நீங்கள் வீடு கட்டும்போது தெற்கு திசையில் தலைவாசல் வைத்து கட்டுவது அவசியம். அதேசமயம் தென்மேற்கு திசையில் அதிகளவு இந்த வாசல் ஆக்கிரமித்து விடாதபடி பார்த்துக் கொள்வதும் அவசியம்.
மகரம் ராசி விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை மிகவும் ஏற்றதாக இருக்கும். இவர்கள் வீடு கட்டும்போது தெற்கு திசையில் வாசல் அமைக்கலாம். அதன்மூலம் உங்களின் செல்வாக்கு மதிப்பு சிறப்பாக உயரும் செல்வ நிலை எப்போதும் திருப்திகரமாக இருக்கும்
வீடு அமைய பொதுவான பரிகாரம்
நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ… அவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும்.
இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த எந்த திசை அமைந்தால் நல்லது என்பதை பார்க்கலாம்
மேஷ ராசி -கிழக்கு மற்றும் வடக்கு
ரிஷப ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
மிதுன ராசி – மேற்கு மற்றும் தெற்கு
கடக ராசி – வடக்கு மற்றும் மேற்கு
சிம்ம ராசி – கிழக்கு மற்றும் வடக்கு
கன்னி ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
துலா ராசி – மேற்கு மற்றும் தெற்கு
விருச்சிக ராசி – வடக்கு மற்றும் மேற்கு
தனுசு ராசி – கிழக்கு மற்றும் வடக்கு
மகர ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
கும்ப ராசி – மேற்கு மற்றும் தெற்கு
மீன ராசி – வடக்கு மற்றும் மேற்கு
இதையும் படிக்கலாமே
உங்கள் ராசிப்படி நீங்க அணிய வேண்டிய டாலர் என்னவென்று தெரியுமா? – Rasi Dollar in Tamil