இந்த மரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்…
வீட்டுக்கோர் மரம் வளர்க்க வேண்டும். மரம் மற்றும் செடிகளை வளர்ப்பதால், தூய்மையான காற்றும், நேர்மறையான எண்ணங்களும் உண்டாகும். வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்களைப் பற்றி காண்போம்.
வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்
வீட்டின் முன்புறம்
வீட்டின் முன்புறத்தில் வேப்பமரம், மாதுளை, துளசி, மல்லிகை, முல்லை, மணிபிளான்ட் ஆகிய மரம் மற்றும் செடிகளை வளர்த்தால், வீட்டில் மங்கலம் பெருகும்.
வீட்டின் பின்புறம்
வீட்டின் பின்புறத்தில் முருங்கை, மாமரம், பலாமரம், கொன்றைமரம், பாக்கு மரம், நார்த்தை மரம், வேப்பமரம் ஆகிய மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
வேலி ஓரம்
வேலி ஓரத்தில் பப்பாளி மரத்தை வளர்த்து வந்ததால், மகிழ்ச்சி பெருகும்.
தண்ணீர் மிகுந்த இடங்கள்
தண்ணீர் மிகுந்த இடங்களில் வாழை மற்றும் தென்னை மரங்களை வளர்த்து வந்தால் ஆயுள் பெருகும்.
வீட்டில் வளர்க்க கூடாதவை
பனைமரம், அரச மரம், ஆலமரம், செண்பகமரம், புளியமரம், அவரை செடி, பாகற்காய் ஆகியவற்றை வளர்க்க கூடாது.