குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை மட்டும் செஞ்சி கொடுங்க போதும்…
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க- குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களுக்கு எளிதில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன கொடுக்க வேண்டும்? என புலம்பும் தாய்மார்களே! இத மட்டும் செஞ்சி கொடுங்க.. போதும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
கஷாயத்திற்குத் தேவையான பொருட்கள்…
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு- 5
பூண்டு -1
இஞ்சி –சிறு துண்டு
ஒமம் -– கால் தேக்கரண்டி
கஷாயம் செய்யும் முறை
சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஓமம் இவற்றை உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும், இடித்து வைத்த பொருட்களை அதில் போட்டு, கொதிக்கவிடவும்.
நீர் நன்றாக சுண்
டவுடன், அதனை வடிகட்டிக் கொள்ளவும். சிறிது ஆற வைத்து, அதில் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
ஆறு மாத குழந்தைக்கு அரை பாலாடையும், ஒன்பது மாத குழந்தைக்கு முக்கால் பாலாடையும் கொடுக்கலாம். அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும் கொடுக்கலாம்.
இந்த கஷாயம் கொடுத்த உடன் குழந்தையை தோளில் போட்டு தட்டி, சிறிது நேரம் விளையாடவிட வேண்டும்.
இந்த கஷாயம் குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசியின்மை பிரச்சனை, வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
இதையும் படிக்கலாமே-
குழந்தையின் அழுகைக்கான காரணம் என்ன? Reason for baby crying…