கால் வெடிப்பு குணமாக -பித்த வெடிப்பு சரியாக-பாத வெடிப்பு Cream – Patha Vedippu kunamaga
Patha Vedippu kunamaga-தலைமுடி, முகம், கழுத்து, கை இவற்றை அழகாக வைத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்ளும் நாம் பாதத்தை மட்டும் ஏனோ மறந்தே விடுகிறோம். நமது ஒட்டு மொத்த உடல் எடையைத் தாங்கக்கூடிய பாதத்தை சரியாக பராமரிப்பது மிக அவசியமானதாகும்.
பாத வெடிப்பு (cracked heels) வருவதற்கான காரணங்கள்…
தண்ணீரில் நீண்ட நேரம் நிற்பாதல் பாத வெடிப்பு வருகிறது.
அதிக உடல் எடையின் காரணமாக பாத வெடிப்பு வருகிறது.
பாதங்களைச் சரியாக பராமரிக்காத நிலையில் பாத வெடிப்பு வருகிறது.
தோல் வறட்சியின் காரணமாக பாத வெடிப்பு வருகிறது.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதனால் தோல் வறண்டு பாத வெடிப்பு வருகிறது.
குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும் அதனால் பாத வெடிப்பு வருகிறது.
பாத வெடிப்பைச் சரிசெய்யக்கூடிய வழிமுறைகள்– பாத வெடிப்பு Cream
மருதாணி இலைகள் – பாத வெடிப்பு Cream
மருதாணி இலைகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கலந்துக்கொள்ளவும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத வெடிப்பானது சரியாகும்.
வேப்பிலை – பாத வெடிப்பு Cream
வேப்பிலையை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்துக்கொள்ளவும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
மசாஜ் – பாத வெடிப்பு Cream
தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை பாத வெடிப்பின் மீது தடவ வேண்டும். பின்னர், பாதங்களை நன்றாக மசாஜ் செய்து வந்தால், பாத வெடிப்பு குணமாகும். கால் பாதங்களை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். பாதங்களை ஈரமில்லாதவாறு நன்றாக துடைத்து உலர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பப்பாளி – பாத வெடிப்பு Cream
பப்பாளி பழத்தை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனை பாத வெடிப்பின் மீது தடவ வேண்டும். பின்னர், கால்களை நன்றாக மசாஜ் செய்து வந்தால் பாதவெடிப்பு குணமாகும்.
எலுமிச்சைச் சாறு – பாத வெடிப்பு Cream
வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறை பிழிந்துவிட்டு, சிறிது நேரம் கால்களை அதில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத வெடிப்பானது குணமாகும். எலுமிச்சையின் தோலை பாத வெடிப்பின் மீது தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
தேங்காய் எண்ணெய் – பாத வெடிப்பு Cream
தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்க்கரை கலந்துக்கொள்ளவும். இதனை, பாதவெடிப்பின் மீது தடவ வேண்டும். பின்னர், பாதங்களை நன்றாக மசாஜ் செய்து வந்தால், பாத வெடிப்பு குணமாகும்.
ஆமணக்கு எண்ணெய் -பாத வெடிப்பு Cream
ஆமணக்கு எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அத்துடன, மஞ்சள் கலந்துக்கொள்ளவும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
உருளைகிழங்கு – பாத வெடிப்பு Cream
உருளைகிழங்கை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். பின்னர், அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் டூத் பேஸ்ட் கலந்துக்கொள்ளவும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவி வந்தால், பாத வெடிப்பு குணமாகும்.
விளக்கெண்ணெய் – பாத வெடிப்பு Cream
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்துக்கொள்ளவும். அத்துடன், மஞ்சள் கலந்துக்கொள்ளவும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
சுண்ணாம்பு – பாத வெடிப்பு Cream
ஒரு கிண்ணத்தில் சுண்ணாம்பு மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை, பாத வெடிப்பின் மீது தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
இதையும் படிக்கலாமே –
1.பூச்சி பல் வலி நீங்க – சொத்தை பல் புழு வெளியேற-சொத்தை பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்