கர்ப்ப கால வாந்தி கட்டுப்படுத்த என்ன வழி?
தாய்மை என்பது ஒரு பெண்ணை பெருமை அடையச் செய்யக்கூடிய ஒரு உணர்வாகும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் மற்றும் மன அளவில் பல வகையான மாறுபாடு ஏற்படும். வாந்தியானது சில பெண்களுக்கு 3 மாதம் வரைக்கும், சில பெண்களுக்கு 5மாதம் வரைக்கும் தொடரும். அத்தகைய வாந்தியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை பற்றி காணலாம்.
தண்ணீர்
கர்ப்பிணிகள் தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பதால் வாந்தி உணர்வானது கட்டுக்குள் வரும்.
இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும். உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாந்தி உணர்வு குறையும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சைப் பழத்தின் வாசனையை முகர்ந்து பார்த்து வந்தால் வாந்தி உணர்வு கட்டுக்குள் வரும். எலுமிச்சைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
சோம்பு
சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
கிவி பழம்
கிவி பழத்தை நன்றாக அரைத்து சாறு எடுத்து, அதனை பருகி வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
கிராம்பு
கிராம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி கட்டுக்குள் வரும்.
சூப்
காய்கறிகளை நன்றாக அரிந்து, வேக வைத்து அத்துடன் பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்த்து கொதிக்கவிட்டு அதனை பருகி வந்தால் வாந்தி உணர்வு குறையும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே
கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்-Pregnancy women food…