இருமல் குணமாக இதை செய்யுங்கள் போதும்-Dry cough home remedies
தொண்டையின் உள்பகுதியில் தொற்று இருந்தால் இருமல் வந்து கொண்டே இருக்கும். தொண்டைப் பகுதியில் உள்ள தொற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண்போம்.
இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கி காய வைத்து, அதனை பொடியாக்கி அத்துடன் சீரகம் பொடி மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
துளசி
துளசி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து அதை கொதிக்க வைத்து, அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இருமல் குணமாகும்.
மஞ்சள் தூள்
பாலில் மஞ்சள் தூள் , மிளகு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
தேன்
ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால், தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டையில் இருக்கும் அரிப்பு மற்றும் புண் குணமாகும்.
உப்பு
உப்பை நீரில் போட்டு அந்த நீரால் வாயைக் கொப்பளித்தால், தொற்று குணமாகும்.
வெற்றிலை
வெற்றிலை காம்பை வாயில் போட்டு மென்றால் இருமல் குணமாகும்.
இதையும் படிக்கலாமே
காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்- Food for during fever…