இனி வாயு பிரச்சனை வரவே வராது…
வாயு வரக் காரணம்
உடலில் அதிகளவு வாயு சேர்வதால், மூட்டு வலி, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, புளியேப்பம் என பல தொந்தரவுகள் வரக்கூடும். வாயு பிரச்சனையைச் சரிசெய்யக் கூடிய மிக எளிமையான வழியைக் காண்போம்.
வாயு குணமாக
தேங்காயை நன்றாக துருவிக்கொள்ளவும். அத்துடன், சீரகம் மற்றும் பெருங்காயம் கலந்து வாயில் போட்டு விழுங்கினால், வாயு தொல்லை நீங்கும்.
வாழைப்பழத்தை நறுக்கி அத்துடன் பெருங்காயம் கலந்து உருண்டையாக்கி வாயில் போட்டு விழுங்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்தால் வாயு நீங்கும்.
வேப்பம் பூவைக் காய வைத்து, வெந்நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வாயு நீங்கும்.
ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், வாயு கோளாறு நீங்கும்.
திரிபுலா பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடித்தால் வாயு தொல்லை நீங்கும்.
எலுமிச்சை சாறில் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கும்.
வெந்நீரில் பெருங்காயத்தை கலந்து குடித்து வந்தால் வாயு சார்ந்த பிரச்சனை நீங்கும்.
தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், எளிதில் செரிமானம் ஆகும். வாயுத் தொல்லை நீங்கும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைப் பருகி வந்தால் வாயு நீங்கும்.
இதையும் படிக்கலாமே
சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா? இந்த ஐந்து பொருட்கள் போதும்-Kidney stone karaiya