ஆன்மீகம்

Dhanvantari 108 potri -108 Dhanvantari names tamil-தன்வந்திரி 108 போற்றி-Thanvanthiri manthiram in tamil-Dhanvantari slokam in tamil

Dhanvantari 108 potri -108 Dhanvantari names tamil-தன்வந்திரி 108 போற்றி-Thanvanthiri manthiram in tamil-Dhanvantari slokam in tamil

Dhanvantari 108 potri

Dhanvantari 108 potri -தன்வந்திரி 108 போற்றி

Dhanvantari 108 potri

உடல்நலத்துடன் திகழ இந்த 108 தன்வந்தரி போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி

16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி

Dhanvantari 108 potri

31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி

46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி

Dhanvantari 108 potri

61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி

76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி

Dhanvantari 108 potri

91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

Dhanvantari 108 potri -108 Dhanvantari names tamil-தன்வந்திரி 108 போற்றி-Thanvanthiri manthiram in tamil-Dhanvantari slokam in tamil Read More »

மாரியம்மன் பாடல்கள்-samayapuram mariamman 108 potri in tamil-mariamman songs-amman songs lyrics in tamil-அம்மன் பக்தி பாடல்கள்

மாரியம்மன் பாடல்கள்-samayapuram mariamman 108 potri in tamil-mariamman songs-amman songs lyrics in tamil-அம்மன் பக்தி பாடல்கள்

samayapuram mariamman 108 potri in tamil

samayapuram mariamman 108 potri in tamil

அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுரம்
மாரியம்மன் ! !
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
திருவடிகளே சரணம் !

ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி

samayapuram mariamman 108 potri in tamil

ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி

ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி

samayapuram mariamman 108 potri in tamil

ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி |
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி |
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி

ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி

ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி

samayapuram mariamman 108 potri in tamil

ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி

ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி

ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி

samayapuram mariamman 108 potri in tamil

ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி

ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி

samayapuram mariamman 108 potri in tamil

ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி

ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து நாயகியே போற்றி

ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
திருவடிகளே சரணம்!

இதையும் படிக்கலாமே

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

108 shani bhagavan potri -sangadam theerkum saneeswaran-108 சனி பகவான் போற்றி-108 சனீஸ்வரன் போற்றி-சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

மாரியம்மன் பாடல்கள்-samayapuram mariamman 108 potri in tamil-mariamman songs-amman songs lyrics in tamil-அம்மன் பக்தி பாடல்கள் Read More »

ராகவேந்திர ஸ்தோத்திரம் – Raghavendra Stotram in tamil-Raghavendra potri in tamil

ராகவேந்திர ஸ்தோத்திரம் – Raghavendra Stotram in tamil-Raghavendra potri in tamil

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ராகவேந்திர ஸ்தோத்திரம் -Raghavendra potri in tamil

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பக விருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி

ஓம் சங்குகர்ண தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் வியாஸராஜரே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திர குருவே போற்றி
ஓம் பக்தி ஸ்வரூபனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவரே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் வேத கோஷ பிரியரே போற்றி

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்வமத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கண்கண்ட குருவே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி
ஓம் தீயோரை திருத்துபவரே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவரே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் பக்தப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஓம் மெய்ஞ்ஞானத்தை தருபவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

ஓம் ஆனந்த நிலையமே போற்றி
ஓம் காஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களைத் தருபவரே போற்றி
ஓம் ஹயக்ரீவ வாக்கே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையா தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் வாதங்களில் வென்றவரே போற்றி
ஓம் “பரிமள” நூல் இயற்றியவரே போற்றி

ஓம் தமிழ்நாட்டில் பிறந்த குருவே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மாஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

ஓம் சுகங்களை தருபவரே போற்றி
ஓம் பேராசைகளை வேரறுப்பவரே போற்றி
ஓம் அன்னதானப் பிரியரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அள்ளித் தருபவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் சகல ஐச்வர்யங்களை தருபவரே போற்றி
ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஓம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா குருவே போற்றி

ராகவேந்திர ஸ்தோத்திரம்

ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் மூலராமரை இன்றும் பூஜிப்பவரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாக மூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி

இதையும் படிக்கலாமே

108 shani bhagavan potri -sangadam theerkum saneeswaran-108 சனி பகவான் போற்றி-108 சனீஸ்வரன் போற்றி-சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

ராகவேந்திர ஸ்தோத்திரம் – Raghavendra Stotram in tamil-Raghavendra potri in tamil Read More »

108 shani bhagavan potri -sangadam theerkum saneeswaran-108 சனி பகவான் போற்றி-108 சனீஸ்வரன் போற்றி-சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

108 shani bhagavan potri -sangadam theerkum saneeswaran-108 சனி பகவான் போற்றி-108 சனீஸ்வரன் போற்றி-சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

108 shani bhagavan potri

108 shani bhagavan potri -108 சனீஸ்வரன் போற்றி

108 shani bhagavan potri

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி

ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி

ஓம் அலிக்கிரகமே போற்றி

ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி

ஓம் அனுஷத்ததிபதியே போற்றி

ஓம் அன்னதானப் பிரியனே போற்றி

ஓம் அசுப கிரகமே போற்றி

ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

ஓம் ஆயுட்காரகனே போற்றி

ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

108 shani bhagavan potri

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் இளைத்த தேகனே போற்றி

ஓம் இரும்புத் தேரனே போற்றி

ஓம் இரும்பு உலோகனே போற்றி

ஓம் ஈடிலானே போற்றி

ஓம் ஈசுவரனானவனே போற்றி

ஓம் உக்கிரனே போற்றி

ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி

ஓம் உபகிரகமுளானே போற்றி

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி

ஓம் எள் விரும்பியே போற்றி

ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி

108 shani bhagavan potri

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் ஏழாம் கிரகனே போற்றி

ஓம் கரு மெய்யனே போற்றி

ஓம் கலி புருஷனே போற்றி

ஓம் கழுகு வாகனனே போற்றி

ஓம் கருங்குவளை மலரனே போற்றி

ஓம் கரிய ஆடையனே போற்றி

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி

ஓம் கருங்கொடியனே போற்றி

ஓம் கருநிறக் குடையனே போற்றி

ஓம் கண்ணொன்றிலானே போற்றி

ஓம் காகமேறியவனே போற்றி

ஓம் காசியில் பூசித்தவனே போற்றி

ஓம் காரியே போற்றி

108 shani bhagavan potri

ஓம் காற்றுக் கிரகமே போற்றி

ஓம் குளிர்க் கோளே போற்றி

ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி

ஓம் குளிகன் தந்தையே போற்றி

ஓம் குறுவடிவனே போற்றி

ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி

ஓம் கைப்புச்சுவையனே போற்றி

ஓம் சடையனே போற்றி

ஓம் சமரிலானே போற்றி

ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி

ஓம் சனிவார நாயகனே போற்றி

108 shani bhagavan potri

ஓம் சாயை புத்ரனே போற்றி

ஓம் சுடரோன் சேயே போற்றி

ஓம் சூரனே போற்றி

ஓம் சூலாயுதனே போற்றி

ஓம் சூர்ய சத்ருவே போற்றி

ஓம் சுக்ர நண்பனே போற்றி

ஓம் சிவனடியானே போற்றி

ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி

ஓம் சீற்றனே போற்றி

ஓம் செயலறச் செய்பவனே போற்றி

ஓம் தமோகணனே போற்றி

108 shani bhagavan potri

ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி

ஓம் தனிக்கோயிலுளானே போற்றி

ஓம் தீபப் பிரியனே போற்றி

ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி

ஓம் துலாராசியிலுச்சனே போற்றி

ஓம் துயரளித்தருள்வோனே போற்றி

ஓம் தைரியனே போற்றி

ஓம் தொலை கிரகமே போற்றி

108 shani bhagavan potri

ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி

ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி

ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி

ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி

ஓம் பயங்கரனே போற்றி

ஓம் பக்கச் சுழலோனே போற்றி

ஓம் பத்மபீடனே போற்றி

ஓம் பத்திரை சோதரனே போற்றி

ஓம் பிணிமுகனே போற்றி

ஓம் பிரபலனே போற்றி

ஓம் பீடிப்பவனே போற்றி

108 shani bhagavan potri

ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி

ஓம் புஷ்பப்பிரியனே போற்றி

ஓம் புதன்மித்ரனே போற்றி

ஓம் பூசத் ததிபதியே போற்றி

ஓம் பேதமிலானே போற்றி

ஓம் பைய நடப்பவனே போற்றி

ஓம் போற்றப்படுபவனே போற்றி

ஓம் மகரத்தாள்பவனே போற்றி

ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

ஓம் மதிப்பகையே போற்றி

ஓம் மநு சோதரனே போற்றி

ஓம் முடவனே போற்றி

ஓம் முதுமுகனே போற்றி

ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி

ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி

ஓம் மேல் திசையனே போற்றி

ஓம் மேற்கு நோக்கனே போற்றி

108 shani bhagavan potri

ஓம் யமுனை சோதரனே போற்றி

ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

ஓம் வன்னி சமித்தனே போற்றி

ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி

ஓம் வக்கரிப்பவனே போற்றி

ஓம் வளை மூன்றுளானே போற்றி

ஓம் வில்லேந்தியவனே போற்றி

ஓம் வில்வப்பிரியனே போற்றி

ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் சனீச்வரனே போற்றி

இதையும் படிக்கலாமே

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

108 shani bhagavan potri -sangadam theerkum saneeswaran-108 சனி பகவான் போற்றி-108 சனீஸ்வரன் போற்றி-சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் Read More »

ஐயப்பன் ஸுப்ரபாதம்-Ayyappa suprabhatham in tamil -Ayyappan suprabhatham lyrics in Tamil

ஐயப்பன் ஸுப்ரபாதம்-Ayyappa suprabhatham in tamil -Ayyappan suprabhatham lyrics in Tamil

Ayyappa suprabhatham in tamil

Ayyappa suprabhatham in tamil

Ayyappa suprabhatham in tamil

1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

Ayyappa suprabhatham in tamil

4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

Ayyappa suprabhatham in tamil

7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

Ayyappa suprabhatham in tamil

10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

Ayyappa suprabhatham in tamil

13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

Ayyappa suprabhatham in tamil

16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

சாஸ்த்ர ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்

2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

Ayyappa suprabhatham in tamil

3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்

4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்…

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

ஐயப்பன் ஸுப்ரபாதம்-Ayyappa suprabhatham in tamil -Ayyappan suprabhatham lyrics in Tamil Read More »

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் -abirami anthathi lyrics in tamil-abirami andhadhi padalgal-abirami anthathi tamil

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் -abirami anthathi lyrics in tamil-abirami andhadhi padalgal-abirami anthathi tamil

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் – abirami andhadhi padalgal

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்… 

அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்…

Abirami Anthathi lyrics in Tamil

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

1. ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

2. பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

4. உயர் பதவிகளை அடைய

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

6. மந்திர சித்தி பெற

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

9. அனைத்தும் வசமாக

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

12. தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

24. நோய்கள் விலக

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

29. எல்லா சித்திகளும் அடைய

சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

32. துர்மரணம் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

35. திருமணம் நிறைவேற

திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

36. பழைய வினைகள் வலிமை பெற

பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

37. நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

40. பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

42. உலகினை வசப்படுத்த

இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.

43. தீமைகள் ஒழிய

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

44. பிரிவுணர்ச்சி அகல

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

47. யோகநிலை அடைய

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48. உடல் பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

50. அம்பிகையை நேரில் காண

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

51. மோகம் நீங்க

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

52. பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

53. பொய்யுணர்வு நீங்க

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

54. கடன் தீர

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55. மோனநிலை எய்த

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

57. வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

58. மனஅமைதி பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

60. மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?

61. மாயையை வெல்ல

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

62. எத்தகைய அச்சமும் அகல

தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

63. அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

64. பக்தி பெருக

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

65. ஆண்மகப்பேறு அடைய

ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

66. கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

67. பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

69. சகல சௌபாக்கியங்களும் அடைய

தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

70. நுண் கலைகளில் சித்தி பெற

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

71. மனக்குறைகள் தீர

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

72. பிறவிப் பிணி தீர

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

73. குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

74. தொழிலில் மேன்மை அடைய

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

75. விதியை வெல்ல

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

76. தனக்கு உரிமையானதைப் பெற

குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

77. பகை அச்சம் நீங்க

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.

78. சகல செல்வங்களையும் அடைய

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.

79. கட்டுகளில் இருந்து விடுபட

விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.

80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட

கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

81. நன்னடத்தை உண்டாக

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

82. மன ஒருமைப்பாடு அடைய

அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.

83. ஏவலர் பலர் உண்டாக

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

84. சங்கடங்கள் தீர

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85. துன்பங்கள் நீங்க

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

86. ஆயுத பயம் நீங்க

மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

87. செயற்கரிய செய்து புகழ் பெற

மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.

88. எப்போதும் அம்பிகை அருள் பெற

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

89. யோக சித்தி பெற

சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு
மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற

மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

92. மனநிலை பக்குவமடைய

பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

93. உள்ளத்தில் ஒளி உண்டாக

நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94. மனநிலை தூய்மையாக

விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.

95. மன உறுதி பெற

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

96. எங்கும் பெருமை பெற

கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

97. புகழும் அறமும் வளர

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே.

99. அருள் உணர்வு வளர

குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

100. அம்பிகையை மனத்தில் காண

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

101. நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

கலையாத கல்வியும்

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே! _அபிராமி பட்டர்

பொருள்

கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

அபிராமி அந்தாதி பாடல் வரிகள் -abirami anthathi lyrics in tamil-abirami andhadhi padalgal-abirami anthathi tamil Read More »

veyuru tholi pangan -Kolaru Pathigam lyrics in Tamil-கோளறு பதிகம்-கோளறு பதிகம் பாடல் வரிகள்-வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள்

veyuru tholi pangan -Kolaru Pathigam lyrics in Tamil-கோளறு பதிகம்-கோளறு பதிகம் பாடல் வரிகள்-வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள்

veyuru tholi pangan -Kolaru Pathigam lyrics in Tamil

veyuru tholi pangan -Kolaru Pathigam lyrics in Tamil

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics) – நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். கோளறு பதிகம் பாடல் வரிகள், வரலாறு, மற்றும் பாடலின் பொருள் மற்றும் கோளறு பதிகம் காணொளி இந்த பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது..’. கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகம் -திருஞானசம்பந்தர் அருளியது

கோளறு பதிகம் பாடல் -1

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் பொருள்

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

கோளறு பதிகம் பாடல்-2

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் பொருள்

அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பாடல்-3

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பாடல் பொருள்

திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

கோளறு பதிகம் பாடல்-4

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

கோளறு பதிகம் பாடல்-5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது

கோளறு பதிகம் பாடல்-6

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

கோளறு பதிகம் பாடல்-7

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பாடல்-8

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

கோளறு பதிகம் பாடல்-9

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

கோளறு பதிகம் பாடல்-10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பாடல் பொருள்

புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

கோளறு பதிகம் பாடல்-11

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பாடல் பொருள்

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

கோளறு பதிகம்

ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அத்னாஅல் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர்.பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார்.

பயன்கள்

கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

veyuru tholi pangan -Kolaru Pathigam lyrics in Tamil-கோளறு பதிகம்-கோளறு பதிகம் பாடல் வரிகள்-வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள் Read More »

அயிகிரி நந்தினி நந்தித மேதினி-Aigiri nandini lyrics in Tamil -lyrics of aigiri nandini-Mahishasura Mardini Lyrics in Tamil

அயிகிரி நந்தினி நந்தித மேதினி-Aigiri nandini lyrics in Tamil -lyrics of aigiri nandini-Mahishasura Mardini Lyrics in Tamil

Aigiri nandini lyrics in Tamil

Aigiri nandini lyrics in Tamil

Aigiri nandini lyrics in Tamil

அசுரனை அழித்த அன்னையின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது…மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி (Mahishasura mardini lyrics) அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள்..

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் பாடல் வரிகள் -Mahishasura Mardini Lyrics in Tamil

Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (1)

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (2)

அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (3)

அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (4)

அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (5)

அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (6)

அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (7)

தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (8)

ஸுரலலனா தததேயி ததேயி க்ருதாபினயோதர ந்ருத்யரதே
க்ருத குகுத꞉ குகுதோ கடதாதி கதால குதூஹல கானரதே
துதுகுட துக்குட திந்திமித த்வனி தீர ம்ருதங்க நினாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்தினி ஶைலஸுதே (9)

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (10)

அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (11)

ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (12)

அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (13)

கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (14)

கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே (15)

கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (16)

விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (17)

பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (18)

கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (19)

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (20)

அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (21)

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி-Aigiri nandini lyrics in Tamil -lyrics of aigiri nandini-Mahishasura Mardini Lyrics in Tamil Read More »

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics

Kanda sasti kavasam lyrics in tamil

Kanda sasti kavasam lyrics in tamil

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!


ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

இதையும் படிக்கலாமே

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

Kanda sasti kavasam lyrics in tamil-கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்-kandha sasti kavasam tamil-kandha sasti kavasam lyrics Read More »

திருப்பாவை பாடல் – Thiruppavai pasuram in tamil- Thiruppavai meaning in tamil

திருப்பாவை பாடல் – Thiruppavai pasuram in tamil- Thiruppavai meaning in tamil

Thiruppavai meaning in tamil

Thiruppavai meaning in tamil- ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் (Andal pasuram lyrics) என்றும் வழங்கப்படும்…  இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்…திருப்பாவை பாடல்கள் (thiruppavai lyrics in tamil) பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.

திருப்பாவை பாடல் – Thiruvempavai in tamil

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி,

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். (7)

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். (10)

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். (11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’

‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’

‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’

‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)

நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். (22)

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். (30)

திருப்பாவை பாடல் விளக்கம்

இதையும் படிக்கலாமே

திருவெம்பாவை பாடல்கள்-திருவெம்பாவை பாடல்கள் விளக்கம்-Thiruvempavai Lyrics and Meaning in Tamil -Thiruvempavai in tamil

மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

திருப்பாவை பாடல் – Thiruppavai pasuram in tamil- Thiruppavai meaning in tamil Read More »

திருவெம்பாவை பாடல்கள்-திருவெம்பாவை பாடல்கள் விளக்கம்-Thiruvempavai Lyrics and Meaning in Tamil -Thiruvempavai in tamil

திருவெம்பாவை பாடல்கள்-திருவெம்பாவை பாடல்கள் விளக்கம்-Thiruvempavai Lyrics and Meaning in Tamil -Thiruvempavai in tamil

Thiruvempavai in tamil

திருவெம்பாவை பாடல்கள்-Thiruvempavai in tamil

திருவெம்பாவை (Thiruvempavai) என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது…. ஒவ்வொரு பாடலின் விளக்கமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…

திருவெம்பாவை பாடல்-1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல்- 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல்கள் விளக்கம்

திருவெம்பாவை – பாடல் 1 விளக்கம்

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?

மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)

இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

திருவெம்பாவை – பாடல் 2 விளக்கம்

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய்.

இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ?

தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

திருவெம்பாவை – பாடல் 3 விளக்கம்

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய்.

எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ?

உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்..

திருவெம்பாவை – பாடல் 4 விளக்கம்

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்;

ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம்.

நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

திருவெம்பாவை – பாடல் 5 விளக்கம்

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக.

இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

திருவெம்பாவை – பாடல் 6 விளக்கம்

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?.

வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும்.

எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

திருவெம்பாவை – பாடல் 7 விளக்கம்

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய்.

தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ?

திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

திருவெம்பாவை – பாடல் 8 விளக்கம்

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்;

ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக;

இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

திருவெம்பாவை – பாடல் 9 விளக்கம்

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்;

அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்;

எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

திருவெம்பாவை – பாடல் 10 விளக்கம்

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்;

அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்;

அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?.

திருவெம்பாவை – பாடல் 11 விளக்கம்

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே!

வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்;

தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

திருவெம்பாவை -பாடல் 12 விளக்கம்

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான்.

விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

திருவெம்பாவை -பாடல் 13 விளக்கம்

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

திருவெம்பாவை – பாடல் 14 விளக்கம்

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

திருவெம்பாவை – பாடல் 15 விளக்கம்

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள்.

பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள்.

பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

திருவெம்பாவை -பாடல் 16 விளக்கம்

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

திருவெம்பாவை -பாடல் 17 விளக்கம்

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

திருவெம்பாவை -பாடல் 18 விளக்கம்

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

திருவெம்பாவை – பாடல் 19 விளக்கம்

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?.

திருவெம்பாவை -பாடல் 20 விளக்கம்

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.
எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;
எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,
எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.
திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.
நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.
இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

திருவெம்பாவை பாடல்கள்-திருவெம்பாவை பாடல்கள் விளக்கம்-Thiruvempavai Lyrics and Meaning in Tamil -Thiruvempavai in tamil Read More »

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)- விநாயகர் அகவல் (vinayagar virutham) என்பது இந்து தெய்வமான கணேஷின் பக்தி கவிதை.

இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது.  இது அவரது மிகப் பெரிய கவிதை என்று கருதப்படுகிறது.

இந்து ஆன்மீக நம்பிக்கை மற்றும் நடைமுறை பற்றிய அகவலின் விளக்கத்தையும், தெய்வத்திற்குக் காரணமான மனித வாழ்வின் போதனைகளின் அம்சங்களையும் பயன்படுத்துகிறது.

விநாயகர் அகவல் பாடல் வரிகள் -vinayagar agaval in tamil

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

ஓம் விக்ன விநாயகா போற்றி…

இதையும் படிக்கலாமே

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

விநாயகர் அகவல் பாடல் வரிகள்-vinayagar agaval lyrics in tamil-vinayagar agaval in tamil Read More »

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil

ஸ்ரீஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

நந்த நந்தனா கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா
பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

கமல தளாக்ஷ கோவிந்தா
காமித பலதாதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா
சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்தா கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரதர கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாசா கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா
ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ரகவசதர கோவிந்தா
வைஜயந்தி மால கோவிந்தா
வட்டிகாசுப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹதீராம ப்ரிய கோவிந்தா
ஹரி சர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரத்ன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா
சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா
நித்யசுபப்ரத கோவிந்தா
நிகில லோகேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹிதா கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷக கோவிந்தா
பரம தாயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சேஷாத்ரி நிலயா கோவிந்தா
சேஷ சாயினி கோவிந்தா
ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

இதையும் படிக்கலாமே

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

சக்திவாய்ந்த சிவ மந்திரம்-கேட்டதை தரும் சிவ மந்திரம் -சிவ மந்திரங்கள்-உடனே பலன் தரும் மந்திரம்-sivan slokam in tamil

Srinivasa Govinda Sri venkatesa govinda lyrics tamil– ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்-Srinivasa Govinda padal varigal in tamil Read More »

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள்

sivan 108 potri in tamil

sivan 108 potri in tamil -சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108

ஓம் அப்பா போற்றி!
ஓம் அரனே போற்றி!
ஓம் அரசே போற்றி!
ஓம் அமுதே போற்றி!
ஓம் அழகே போற்றி!
ஓம் அத்தா போற்றி!
ஓம் அற்புதா போற்றி!
ஓம் அறிவா போற்றி!
ஓம் அம்பலா போற்றி!
ஓம் அரியோய் போற்றி!
ஓம் அருந்தவா போற்றி!
ஓம் அனுவே போற்றி!
ஓம் அன்பா போற்றி!
ஓம் ஆதியே போற்றி!
ஓம் ஆத்மா போற்றி!
ஓம் ஆரமுதே போற்றி!

ஓம் ஆரணனே போற்றி!
ஓம் ஆண்டவா போற்றி!
ஓம் ஆலவாயா போற்றி!
ஓம் ஆரூரா போற்றி!
ஓம் இறைவா போற்றி!
ஓம் இடபா போற்றி!
ஓம் இன்பா போற்றி!
ஓம் ஈசா போற்றி!
ஓம் உடையாய் போற்றி!
ஓம் உணர்வே போற்றி!
ஓம் உயிரே போற்றி!
ஓம் ஊழியே போற்றி!
ஓம் எண்ணே போற்றி!
ஓம் எழுத்தே போற்றி!
ஓம் எண் குணா போற்றி!
ஓம் எழிலா போற்றி!

ஓம் எளியா போற்றி!
ஓம் ஏகா போற்றி!
ஓம் ஏழிசையே போற்றி!
ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!
ஓம் ஐயா போற்றி!
ஓம் ஒருவா போற்றி!
ஓம் ஒப்பிலானே போற்றி!
ஓம் ஒளியே போற்றி!
ஓம் ஓங்காரா போற்றி!
ஓம் கடம்பா போற்றி!
ஓம் கதிரே போற்றி!
ஓம் கதியே போற்றி!
ஓம் கனியே போற்றி!
ஓம் கலையே போற்றி!
ஓம் காருண்யா போற்றி!
ஓம் குறியே போற்றி!

ஓம் குணமே போற்றி!
ஓம் கூத்தா போற்றி!
ஓம் கூன்பிறையாய் போற்றி!
ஓம் சங்கரா போற்றி!
ஓம் சதுரா போற்றி!
ஓம் சதாசிவா போற்றி!
ஓம் சிவையே போற்றி!
ஓம் சிவமே போற்றி!
ஓம் சித்தமே போற்றி!
ஓம் சீரா போற்றி!
ஓம் சுடரே போற்றி!
ஓம் சுந்தரா போற்றி!
ஓம் செல்வா போற்றி!
ஓம் செங்கணா போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் ஞாயிறே போற்றி!

ஓம் ஞானமே போற்றி!
ஓம் தமிழே போற்றி!
ஓம் தத்துவா போற்றி!
ஓம் தலைவா போற்றி!
ஓம் தந்தையே போற்றி!
ஓம் தாயே போற்றி!
ஓம் தாண்டவா போற்றி!
ஓம் திங்களே போற்றி!

ஓம் திசையே போற்றி!
ஓம் திரிசூலா போற்றி!
ஓம் துணையே போற்றி!
ஓம் தெளிவே போற்றி!
ஓம் தேவதேவா போற்றி!
ஓம் தோழா போற்றி!
ஓம் நமசிவாயா போற்றி!
ஓம் நண்பா போற்றி!

ஓம் நஞ்சுண்டாய் போற்றி!
ஓம் நான்மறையாய் போற்றி!
ஓம் நிறைவா போற்றி!
ஓம் நினைவே போற்றி!
ஓம் நீலகண்டா போற்றி!
ஓம் நெறியே போற்றி!
ஓம் பண்ணே போற்றி!
ஓம் பித்தா போற்றி!

ஓம் புனிதா போற்றி!
ஓம் புராணா போற்றி!
ஓம் பெரியோய் போற்றி!
ஓம் பொருளே போற்றி!
ஓம் பொங்கரவா போற்றி!
ஓம் மதிசூடியே போற்றி!
ஓம் மருந்தே போற்றி!
ஓம் மலையே போற்றி!
ஓம் மனமே போற்றி!
ஓம் மணாளா போற்றி!
ஓம் மணியே போற்றி!
ஓம் மெய்யே போற்றி!
ஓம் முகிலே போற்றி!
ஓம் முக்தா போற்றி!
ஓம் முதல்வா போற்றி!
ஓம் வானமே போற்றி!

ஓம் வாழ்வே போற்றி!
ஓம் வையமே போற்றி!
ஓம் விநயனே போற்றி!
ஓம் விநாயகனே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

இதையும் படிக்கலாமே

சக்திவாய்ந்த சிவ மந்திரம்-கேட்டதை தரும் சிவ மந்திரம் -சிவ மந்திரங்கள்-உடனே பலன் தரும் மந்திரம்-sivan slokam in tamil

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

sivan 108 potri in tamil-சிவன் போற்றி மந்திரம்-சிவன் மந்திரம் 108-சிவன் மந்திரம் தமிழில்-108 சிவபெருமான் நாமங்கள் Read More »

சக்திவாய்ந்த சிவ மந்திரம்-கேட்டதை தரும் சிவ மந்திரம் -சிவ மந்திரங்கள்-உடனே பலன் தரும் மந்திரம்-sivan slokam in tamil

சக்திவாய்ந்த சிவ மந்திரம்-கேட்டதை தரும் சிவ மந்திரம் -சிவ மந்திரங்கள்-உடனே பலன் தரும் மந்திரம்-sivan slokam in tamil

சக்திவாய்ந்த சிவ மந்திரம்

சிவ மந்திரம் – சக்திவாய்ந்த சிவ மந்திரம்

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

கேட்டதை தரும் சிவ மந்திரம்

சிவா காயத்ரி மந்திரம் 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவா காயத்ரி மந்திரம் 2

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

சிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் திருவடி நிழலில் இடம் கிடைக்கும்!

சிவ மந்திரங்கள் – sivan slokam in tamil

பிரதோஷ மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

தரித்திரம் நீக்கும் மந்திரம்

ஓம் ருத்ராய ரோகநாஷாய
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ

மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

உடனே பலன் தரும் மந்திரம்

சிவ மந்திரம்

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய

ருத்ர மந்திரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.
சிங் சிங் சிவாய ஓம்

மூல மந்திரம்

ஓம் நம சிவாய

இதையும் படிக்கலாமே

சுகப்பிரசவம் தரும் தேவி  – திருக்கருகாவூர் அற்புதம் -கரு உருவாக்கும் நாயகி- கர்ப்ப ரட்சாம்பிகை தேவி…

பிரதோஷம் வழிப்பாட்டின் சிறப்பும், பயனும்-Pradosham

சக்திவாய்ந்த சிவ மந்திரம்-கேட்டதை தரும் சிவ மந்திரம் -சிவ மந்திரங்கள்-உடனே பலன் தரும் மந்திரம்-sivan slokam in tamil Read More »

Scroll to Top