மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம் – மூட்டு வலி நீங்க உணவுகள் -Mootu Vali Treatment in Tamil

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம் – மூட்டு வலி நீங்க உணவுகள்- இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளைச் சுற்றி ஏற்படக்கூடிய வீக்கமானது, நாளடைவில் வலியை ஏற்படுத்தும் இதுவே மூட்டு வலியாகும். கால்சியம் குறைபாடு, மூட்டுகளின் மசகு எண்ணெய் குறைபாடு ஆகியவற்றால் மூட்டுவலியானது ஏற்படுகிறது. சத்தான உணவு உண்பதன் மூலம் மூட்டு வலியைக் குணப்படுத்த முடியும்.

மூட்டு வலி ஏன் வருகிறது?

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும்.

மூட்டு தேய்மானம் அறிகுறிகள்

காலை வேளையில் மூட்டு இறுக்கம் வரும், செயல்பாடுகள் தொடங்கத் இது சற்றே மாறும். வேலை செய்தால் வலி காணப்படும், ஓய்வெடுத்தால் வலி குறையும். நோய் முற்றிவிட்டால் ஓய்வெடுத்தாலும் வலி இருக்கும்.

மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு உண்டாகிறது.

மூட்டு வலியைப் போக்கும் வழிமுறைகள் – Mootu Vali Treatment in Tamil

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

ஆட்டுக் காலை சூப்பாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலியானது குறையும்.

வெற்றிலையையும், வாகை இலையையும் அரைத்து அத்துடன் கிராம்பு பொடி கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், மூட்டு வலியானது குணமாகும்.

பாலுடன் மஞ்சள் மற்றும் மிளகு கலந்து குடித்து வந்தால் மூட்டு வலியானது குணமாகும்.

சோயா பீன்ஸ், வேர்க்கடலை, கொள்ளு போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் மூட்டுவலியானது குறையும்.

கேழ்வரகால் செய்த உணவை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியானது குணமாகும்.

கீரை,  பச்சை காய்கறிகள், ப்ரோக்கோலி இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டுவலியானது குறையும்.

கால்சியம் சத்து நிறைந்த பால் சார்ந்த பொருட்களை உண்பதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம். பால் சார்ந்த பொருட்கள் எலும்பைப் பலப்படுத்தும்.

தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

பழவகைகளில் ஆப்பிள், கிரான்பெர்ரி, பாதாமி இவற்றை உட்கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

புரதச் சத்து நிறைந்த நட்ஸ் மற்றும் விதை வகைகளை உட்கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

கானாங்கெளுத்தி, சாலமன் மீன்களை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் மூட்டுவலியைக் குணப்படுத்தலாம்.

ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.

இதையும் படிக்கலாமே

எலும்பை வலிமை அடைய செய்யும் ஆற்றலை உடையது முருங்கைக்கீரை- Murungai Keerai Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top