மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் – Thirumana Porutham Tamil – Marriage Porutham in Tamil

முக்கியமான திருமண பொருத்தம்

திருமணம் நடக்க வேண்டுமெனில் ஆண், பெண் இருவரின் ஜாதகத்தைப் பார்த்து பொருத்தங்கள் உள்ளதா என்பது பார்ப்பது மிக அவசியமாகும். மணமக்களின் வாழ்க்கை சீரும் சிறப்பாக, செல்வ செழிப்பாக, அன்பு அன்னியோன்யமாக இருக்க அவசியம் பொருத்தம் பார்க்க வேண்டும். மிகவும் முக்கியமான பொருத்தங்கள் எவை என்பதைப் பற்றிக் காண்போம்.

திருமண பொருத்தங்கள்… – Thirumana Porutham Tamil

1. தினப் பொருத்தம்

2. கணப்பொருத்தம்

3. மகேந்திரப் பொருத்தம்

4. ஸ்திரீ தீர்க்கம்

5. யோனிப் பொருத்தம்

6. இராசிப் பொருத்தம்

7. இராசி அதிபதி பொருத்தம்

8. வசியப் பொருத்தம்

9. ரஜ்ஜிப்பொருத்தம்

10. வேதைப் பொருத்தம்

11. நாடிப் பொருத்தம்

12. விருட்சப் பொருத்தம்

திருமண பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களை சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டா? அல்லது இல்லையா? என்று பார்க்க வேண்டும்.

1.தினப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

தினப்பொருத்தம் என்பது மணமக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுகிறது. இது மிகவும் முக்கியமான பொருத்தமாகப் பார்க்கப்படுகிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 இந்த எண்ணிக்கையில் இருந்தால் தினப்பொருத்தம் உள்ளது என்று பொருள்.

2. கணப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

கணம் பொருத்தமானது தம்பதியரின் மன ஒற்றுமைக்காகப் பார்க்கப்படுகிறது. கணப்பொருத்தம் என்பது தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

பொருந்தக்கூடிய கணங்கள்

மணமக்கள இருவருக்கும் தேவகணம் உள்ளது என்றால் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் இருவருக்கும் மனிதகணம் உள்ளது என்றால் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் தேவகணம், மனித கணம் என இருந்தாலும் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

மணமக்கள் மனித கணம், ராஜஸ கணம் என இருந்தாலும் கணப்பொருத்தம் உள்ளது என்பர்.

பொருந்தாத கணங்கள்

மணமக்கள் தேவகணம் , ராஜஸகணம் என்று இருந்தால் கணப்பொருத்தம் இல்லை என்று பொருள்.

மணமக்கள் இருவரும் ராஜஸகணம் என்று இருந்தால் கணப்பொருத்தம் இல்லை என்று பொருள்.

3. மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

மகேந்திரப் பொருத்தம் என்பது மணமக்களின் புத்திர பாக்கியம், செல்வ செழிப்பு மற்றும் பொருளாதார வளத்தை குறிக்கிறது. பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்ற எண்ணிக்கையில் இருந்தால் மகேந்திர பொருத்தம் உள்ளது என்பர்.

4. ஸ்திரீ தீர்க்கம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

ஸ்திரி தீர்க்கம் என்பது மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படும் மிக முக்கியமான பொருத்தமாகும். ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் மிகவும். முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. பெண்ணின் நட்சத்திரலிருந்து ஆணின் நட்சத்திரம் 13 க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் உள்ளது என்று பொருள்.

5. யோனிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

யோனிப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு பின் மணமக்களின் உடல் தேவையை எந்த வகையில் பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதைப் பற்றி அறியக்கூடியது ஆகும். திருமணத்தில் இணையும் மனங்கள், உடல் இன்பத்திலும் களித்தால் வாழ்நாள் மிகச்சிறப்பாக அமையும்.

6.இராசிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

இராசிப் பொருத்தம் என்பது வம்ச விருத்தி செய்வதற்காக பார்க்கப்படும் மிக முக்கிய பொருத்தம் ஆகும். பெண் ராசியிலிருந்து ஆணின் ராசி 7 க்கு மேல் இருந்தால் இந்த பொருத்தம் உள்ளது என்பது பொருள்.

திருமண பொருத்தம்

7.இராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

இராசி அதிபதி பொருத்தம் என்பது சந்ததி விருத்திக்காகவும், மணமக்கள் ஒற்றுமையாக வாழ பார்க்கக்கூடிய பொருத்தம் ஆகும்.

8.வசியப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

வசிய பொருத்தம் என்பது மணமக்களின் நேச வாழ்விற்காக பார்க்கப்படும் பொருத்தம்.

வசியம் பொருத்தம் உள்ள ராசிகள்
மேஷம்சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்கடகம், துலாம்
மிதுனம்கன்னி
கடகம்விருச்சிகம், தனுசு
சிம்மம்துலாம், மீனம்
கன்னிரிஷபம், மீனம்
துலாம்மகரம்
விருச்சிகம்கடகம், கன்னி
தனுசுமீனம்
மகரம்மகரம்
கும்பம்மீனம்
மீனம்மகரம்
Marriage Porutham in Tamil

9.ரஜ்ஜிப்பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

ரஜ்ஜுப் பொருத்தம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தல் கூடாது.

ரஜ்ஜுப் பொருத்தம் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை,

சிரசு ரஜ்ஜு – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

கழுத்து ரஜ்ஜு -ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

வயிறு ரஜ்ஜு -கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

தொடை ரஜ்ஜு -பரணி, பூரம்,பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

பாத ரஜ்ஜு – அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஒன்றொன்று ஒன்று பொருந்தாது.

ஆகியவையாகும்.

10. வேதைப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

வேதைப் பொருத்தம் என்பது துன்பமில்லாத வாழ்க்கையைக் குறிக்கிறது. வேதைப் பொருத்தம் இல்லாவிட்டால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வரும். வேதை பொருத்தம் இருந்தால் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

வேதை நட்சத்திரங்கள்
அஸ்வினிகேட்டை
பரணிஅனுஷம்
கார்த்திகைவிசாகம்
ரோகிணிசுவாதி
திருவாதிரைதிருவாதிரை
புனர்பூசம்உத்திராடம்
பூசம்பூராடம்
ஆயில்யம்மூலம்
மகம்ரேவதி
பூரம்உத்திரட்டாதி
உத்திரம்பூரட்டாதி
அஸ்தம்சதயம்
Marriage Porutham in Tamil

11. நாடிப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

திருமண பொருத்தம்

நாடிப்பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் என்று கூறப்படுகிறது. நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் மணமக்கள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்று கூறப்படுகிறது. நாடியை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை,

வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வாத நாடியாகும்.

பித்த நாடி

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பித்த நாடியாகும்.

நீர்ம நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் நீர்ம நாடியாகும்.

12. விருட்சப் பொருத்தம் என்றால் என்ன? -Thirumana Porutham Tamil

விருட்ச பொருத்தம் என்பது பால் மரத்தை பொருத்து பார்க்கப்படும் பொருத்தமாகும். திருமணம் செய்ய உள்ள தம்பதிகளில் ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது பால் மரமாக இருந்தால் மிகவும் நல்லது. விருட்சம் என்றால் மரம் என்ற பொருள் இதில் 27 நட்சத்திரங்களையும் இளகிய பால் மரங்கள் , உறுதிதன்மையான பால் இல்லாத மரங்கள் என்று பிரித்துள்ளனர். பெண்ணின் நட்சத்திரமும் – ஆணின் நட்சத்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு என்று கூறுவர்.

பால் மரம் உள்ள நட்சத்திரங்கள்

கார்த்திகை – அத்தி மரம்

ரோகிணி -நாவல்

பூசம் – அரசு

ஆயில்யம்- புன்னை

மகம் -ஆலமரம்

பூரம்- பலா

உத்திரம் – அலரி

அஸ்தம் – வேலம்

கேட்டை -பிராய்

மூலம் -மா

பூராடம்-வஞ்சி

உத்திராடம்-பலா

திருவோணம் -எருக்கு

பூரட்டாதி -தேமா

ரேவதி -இலுப்பை

பால் மரம் இல்லாத நட்சத்திரங்கள்

அஸ்வினி – எட்டி

பரணி – நெல்லி

மிருகசீரிடம் – கருங்காலி

திருவாதிரை – செங்கருங்காலி

புனர்பூசம் – மூங்கில்

சித்திரை-வில்வம்

சுவாதி- மருதம்

விசாகம் -விளா

அனுஷம் – மகிழம்

அவிட்டம் -கன்னி

உத்திரட்டாதி – வேம்பு

ராசி அதிபதி பொருத்தம்

ராசி அதிபதிகள்பொருந்தக்கூடிய ராசி அதிபதிகள்
சூரியன்சந்திரன், செவ்வாய், குரு ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சந்திரன்சூரியன், புதன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
செவ்வாய்சந்திரன், சூரியன், குரு ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
புதன்சூரியன், சுக்கிரன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
குருசூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சுக்கிரன்புதன், சனி ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
சனிபுதன், சுக்ரன் ஆகிய ராசி அதிபதிகள் பொருந்தும்.
Marriage Porutham in Tamil

இதையும் படிக்கலாமே

  1. திருமண நட்சத்திர பொருத்தம் அட்டவணை – Natchathira Porutham Tamil
  2. திருமண ராசி பொருத்தம்- எந்த எந்த ராசிக்கு எந்த ராசி பொருந்தும்? – Rasi Porutham in Tamil
Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top