மலச்சிக்கல் தீர எளிய வழிகள்- மலம் எளிதாக வெளியேற பாட்டி வைத்தியம் -Malaccikkal kunamaga

மலம் எளிதாக வெளியேற பாட்டி வைத்தியம்

Malaccikkal kunamagaமலச்சிக்கல் தீர எளிய வழிகள்- மலம் எளிதாக வெளியேற பாட்டி வைத்தியம் – (constitution meaning in tamil) உடம்பில் உள்ள கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும். அவ்வாறு கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலையில், வயிற்றில் வலி, வயிற்றில் வீக்கம், குமட்டல், வாந்தி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வர நேரிடும். இன்று பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். மலச்சிக்கலில் இருந்து விடுபட சில வழிகளைக் காணலாம்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்…

குறைந்த நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

தேவையான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

உடல் உழைப்பின்மையால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கலைக் குணப்படுத்தும் வழிமுறைகள்…

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும், மலச்சிக்கல் பிரச்சனை வராது.

கீரைகள், காய்கறி, சர்க்கரை வள்ளிகிழங்கு, பழங்கள், முழுதானியங்கள், பசலைக்கீரை, முருங்கைக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, அத்திப்பழம் முதலியவற்றைச் சாப்பிட்டு வந்தாலே போதும் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

மிதமான சுடு தண்ணீரில் விளக்கெண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

வெந்தயத்தை அரைத்து அத்துடன் சர்க்கரை மற்றும் விளக்கெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

விளக்கெண்ணையை பாலுடன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

முருங்கைக்கீரையைத் தேங்காய் மற்றும் சீரகத்துடன் சேர்த்து துவையலாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

நார்ச்சத்து நிறைந்த பழங்களான ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ப்ளம்ஸ் இவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

சூரிய காந்தி விதை, ஆளி விதை, எள் மற்றும் பாதாம் இவற்றை அரைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

புதினாவை நீரில் கொதிக்கவிட்டு, பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். எளிதாக மலம் வெளியேறும்.

மோரில் இஞ்சி, பெருங்காயம், கல் உப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

இஞ்சி அல்லது புதினா டீபுதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது. மேலும் பசியை தூண்டுதல், சீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல்.

இதையும் படிக்கலாமே

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம் – கருவளையம் மறைய டிப்ஸ்- Karuvalayam Poga Tips in Tamil

கரு கரு என தலை முடி வளர வேண்டுமா? – முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம் – Mudi Valara Tips in Tamil

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top