மகா  லட்சுமி அருளால் செல்வம் பெருக இந்த செடிகளை  மட்டும் வீட்டில் வளர்த்தால் போதும்…

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே… இந்த செடிகளை உங்கள் வீட்டில் வளர்த்தால் போதும். மகா லட்சுமி இல்லம் தேடி வருவார். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

செல்வம் பெருக

துளசி

செல்வம் பெருக

வீட்டின் முன் துளசி செடியை நிச்சயமாக  வளர்க்க வேண்டும். துளசி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் செல்வம் பெருகும். அதிஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரும். தெய்வத்  தன்மையான இந்த செடி பெருமாளுக்கு உகந்தது ஆகும். துளசி செடியை தினமும் வணங்கி வர வேண்டும். குளிக்காமல் துளசி இலையைப் பறிக்கவோ, சாப்பிடவோ கூடாது.

மனோரஞ்சித செடி

செல்வம் பெருக

மனோரஞ்சித செடியை வீட்டில் வளர்த்து வந்தால் மகா லட்சுமி உள்ளம் மகிழ்ந்து இல்லம்  தேடி வருவார். மனோரஞ்சித செடி லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான செடியாகும். இந்த செடி வீட்டில் இருந்தால் லட்சுமி தேவி வீட்டில் நிலைத்து இருப்பாள்.

மலர்கள்

செல்வம் பெருக

மல்லிகை, முல்லை, பாரிஜாதம், மஞ்சள் அலரி, சிவப்பு செம்பருத்தி இந்த செடிகளை வீட்டின முன்புறம் நட்டு வளர்த்தால் லட்சுமி தேவி இல்லம் தேடி வருவாள். இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும்.

மருதாணி, மாதுளை

செல்வம் பெருக

மருதாணி மற்றும் மாதுளை செடிகளை வீட்டின் முன்புறம் நட்டு வைத்து நன்றாக பராமரித்து வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்.

இதையும் படிக்கலாமே

தும்பையின் மருத்துவக்குணங்கள் -Thumbai Poo Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top