தீய சக்திகளை விரட்டியடிக்கும் மணி ஓசை… – Theeya sakthi

தீய சக்தி

கோயிலின் வரக்கூடிய மணி ஓசையானது உள்ளத்தில் மகிழ்ச்சியையும், அமைதியையும் உருவாக்குகிறது எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நேர்மறை எண்ணங்களையும் கொடுக்கக்கூடியது. தீய சக்திகளை விரட்டி அடிக்கக்கூடிய ஆற்றலை உடையது மணியோசை.

நுழை வாசல்

கோவிலின் நுழைவாசலில் நுழைந்தாலே மனம் அமைதி பெறும். கடவுளைக் காண வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை மனதில் கொண்டு கண்கள் அலைமோத, பாதம் வேகமாக நடக்க, வாயோ மந்திரத்தை உச்சரிக்க, மனதில் கடவுளை மட்டுமே நினைத்து முன்னேறி நடந்தால் இறைவனின் அருளைப் பெறலாம்.

நேர் மறை எண்ணங்கள்

 நெற்றியில் அணியக்கூடிய குங்குமம் , சந்தனம், கழுத்தில் அணியக்கூடிய சாமி கயிறு கோவிலில் ஒலிக்கக்கூடிய மணி ஓசை, பக்தி பாடல் என அனைத்துமே எதிர்மறை எண்ணங்ககளைப் போக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கக்கூடியது ஆகும்.

கோவில் மணி

தீய சக்தி

கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது நேர்மறை எண்ணங்களையும், மன அமைதியையும் தருகிறது. கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கக்கூடியது. கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணி ஓசை செல்லக்கூடிய திசை வரைக்கும் நேர்மறை சக்தியே நிறைந்திருக்கும். கோவில் மணியிலிருந்து வரக்கூடிய மணியோசையானது மனிதனின் மனம், உடல், ஆன்மா அனைத்திற்கும் ஆற்றலை அளிக்கக்கூடியது.

வீட்டின் மணியோசை

தீய சக்தி

 வீட்டில் மங்கலம் பெருக வேண்டும் என்றால், நிச்சயம் மணியோசை ஒலிக்க வேண்டும். வீடுகளில் கடவுளை வணங்கும்போது நிச்சயம் மணி அடிக்க வேண்டும். அவ்வாறு அடிப்பதன் மூலம் எதிர்மறை மற்றும்  கெட்ட சக்திகள் விலகி ஓடும். மணியோசை கேட்பதால்  குடும்பத்தார் உடன் வீண் விவாதங்கள், சண்டை, சச்சரவு ஆகியவை குறையும். வீட்டின் மற்றும் குடும்பத்தார் மீது உள்ள கண் திருஷ்டி மற்றும் வாஸ்து சார்ந்த பிரச்சனை என அனைத்தும பறந்தோடும்.

இதையும் படிக்கலாமே

மகிழ்ச்சியையும், மங்கலத்தையும் பெருக்கக்கூடிய வளையல்… வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா-Valaiyal

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top