விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer-vidukathai tamil-தமிழ் விடுகதை மற்றும் விடைகள்-Tamil vidukathai

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer

தமிழ் விடுகதை மற்றும் விடைகள்

உணவுப் பொருட்கள் பற்றிய விடுகதைகள் -விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer -Tamil vidukathai

ஒரு மாதத்தில் 5 பூக்கள் அது என்ன?

விடை – பால், தயிர், மோர், வெண்ணெய்.

தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள். அது என்ன?

விடை – பால், தயிர், வெண்ணெய்.

ஏரி தண்ணீர் வற்றவற்ற எருமை கடா உப்ப உப்ப. அது என்ன?

விடை – பணியாரம்

ஒன்னும் இரண்டும் கலப்பு, உள்ளங்கையில் அடைப்பு, ஆவியில் நடிப்பு, ஆண்டவனுக்கு படைப்பு. அது என்ன?

விடை – கொழுக்கட்டை

அரிசி பணத்திற்கு ஒரு படி ஆக்கி தின்ன ஆள் இல்லை. அது என்ன?

விடை – உப்பு

ஊருக்கெல்லாம் ஒரே கல். அது என்ன?

விடை – உப்பு

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer -Tamil vidukathai

கல்லும் கரடும் முள்ளும் முரடும் வேரும் விறகும். அது என்ன?

விடை – கற்கண்டு

ஆற்று மணலை அள்ளி அள்ளி தின்போம், பாராங்கல்லை கடித்துக் கடித்த தின்போம். அது என்ன?

விடை – சர்க்கரை, கற்கண்டு.

வெள்ளைக்காரன் பூக்க வெகுபேர் காத்திருக்கிறார். அது என்ன?

விடை – சோறு

கறுத்த கட்டிலின் மீது காரிகையாம். விரிக்கும் விரிப்பாம். எடுக்கும் விரிப்பாம். அது என்ன?

விடை – தோசை

அப்பனே பரங்கி காயை அடுப்பிலே ஏறினாயே ஏறி இறங்கினாலும் என்னை நீ மறந்து விடாதே. அது என்ன? விடை – வெல்லம்

பண்ட பாத்திரங்கள் பற்றிய விடுகதைகள் -விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer -Tamil vidukathai

ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை. அது என்ன?

விடை – அடுப்பு

கடா கடா குடுகுடு நடுவிலே பள்ளம். அது என்ன?

விடை – ஆட்டுக்கல்

தமிழ் விடுகதை மற்றும் விடைகள்

பொழுது விடிந்தால் நல்லது என்றது ஒன்று. பொழுது விடிய வேண்டாம் என்றது ஒன்று. விடிந்தால் என்ன விடியாவிட்டால் என்ன? என்றது. இன்னொன்று. அது என்ன?

விடை – கட்டில், அடுப்பு, உறி

அட்டைக்கு ஆயிரம் கண். அது என்ன?

விடை – சல்லடை

ஆள் இறங்காத கிணற்றுகுள் மரம் இறங்கி கூத்தடிக்கிறது. அது என்ன?

விடை – மத்து

கையிலே கணக்கு போடும் கணக்குப்பிள்ளை. அது என்ன?

விடை – படி

விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer -vidukathai tamil

அனல் மேல் கருப்பு குதிரை அதன் மேல் வெள்ளையன் ஏரியில் இருக்கிறான். அது என்ன?

விடை – தோசைக்கல்

அக்காள் வீட்டுக்கு தங்கை போகலாம். தங்கை வீட்டுக்கு அக்கா போக முடியாது. அது என்ன?

விடை – படியும், உழக்கும்

இத்தனையுண்டு பூனைக்குட்டி வைத்ததெல்லாம் சுமக்குது. அது என்ன?

விடை – அடுப்பு

ஒத்தைகால் குள்ளனுக்கு எட்டுக்கை. அது என்ன?

விடை – குடை

கடக்க முடக்கான் சந்தைக்கு போறான். அது என்ன?

விடை – வண்டி

நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்க நறுக்கு ஒன்று கடிக்கும் வேலை. அது என்ன?

விடை – அரிவாள் மனை

அணிகலன்கள் பற்றிய விடுகதை -தமிழ் விடுகதை மற்றும் விடைகள் -vidukathai tamil

கங்கையிலே பிறந்து வளர்ந்துஇ கடைகளிலே வந்து போயிஇ மங்கையின் உடலிலே மருவி மங்காமல் ஜொலிப்பாள் ராணி. அது என்ன?

விடை – முத்து

வீட்டை சுற்றி புளியமரம். உலுக்கினால் கலகல என்னும். அது என்ன?

விடை – வளையல்

ஒட்டு திண்ணையிலே பட்டு காயுது. அது என்ன?

விடை – மூக்குத்தி

தரையில் முட்டிடும் விரலில் ஒட்டிடும். அது என்ன?

விடை – கால் மெட்டி

கழுத்து உண்டு தலையில்லை. உடல் உண்டு உயிர் இல்லை. கையொன்று விரல் இல்லை. அது என்ன?

விடை – சட்டை

வாகனங்கள் பற்றிய விடுகதை -தமிழ் விடுகதை மற்றும் விடைகள் -vidukathai tamil

ஆணை சேனை 60 பேர் கூடி வாளறுத்து கூறு போட்டு வன்னி மரம் பிளந்து நாலு கால் சிலம்பு கட்டி நடுத்தெருவில் போற பெண்ணே. அது என்ன?

விடை – ரதம்

மொட்டை தட்டிலே எட்டு பேர் பயணம். அது என்ன?

விடை – படகு

உடல் உண்டு உயிர் இல்லை ஓடி ஓடி போய் சேர்ந்தான் ஊருக்கு. அது என்ன?

விடை – சைக்கிள்

அறிவியல் பற்றிய விடுகதைகள் – விடுகதைகள் comedy vidukathai in tamil with answer

உயிரில்லாமல் ஓடி திரிவான். மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான். வாயில்லாமல் தண்ணீர் குடிப்பான். வயிறு இல்லாமல் கறியை தின்பான். காற்றிற்கு அஞ்சான். மழைக்கு அஞ்சான். காட்டிலும் மேட்டிலும் போவான். அவன் யார்?

விடை – தொடர்வண்டி

அடங்கி கிடப்பான் எடுத்து காதில் வைத்தால் கதை ஆயிரம் சொல்லுவான். அது என்ன?

விடை – தொலைபேசி

ஆடை இல்லாத கருப்பழகி ஆடி சுழன்று பாடுகிறார். அது என்ன?

விடை – இசை தட்டு

ஆயிரமாய் கூட செய்யும். ஆரவாரம் எழுப்பச் செய்யும். ஆடிப்பாடி விளையாடும். அடங்கிவிடும் பெட்டிக்குள். அது என்ன?

விடை – திரைப்படம்

விடுகதைகள் comedy vidukathai in tamil with answer -vidukathai tamil

இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான். அது என்ன?

விடை – தந்தி

ரத்தம் குடிப்பான் கண்ணுக்கு தெரியாதவன். அது என்ன?

விடை – மின்சாரம்

உயர பறக்குது ஊர் குருவி. அது என்ன?

விடை – வானஊர்தி

உள்ளதை சொல்லுவான் சொன்னதை கொள்ளுவான். அவன் யார்?

விடை – டேப்ரிக்கார்டர்

வானத்திலே ரோடு போட்டு எட்டாத தொலைவில் இங்கிருந்து பார்த்தால் இங்கிலீஷ்காரன் பள்ளிக்கூடம். அது என்ன?

விடை – டெலிவிஷன்

இதையும் படிக்கலாமே

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்-vidukathai in tamil-vidukathai in tamil with answer

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top