செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…

செல்வ செழிப்போடு மங்கலமாக வாழ வேண்டும் என கடினமாக உழைக்கும் மக்களே… மகா லட்சுமி  மனம் மகிழ்ந்து இல்லம் தேடி வர இதை செய்யுங்கள் போதும். வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும்.

பச்சை பட்டு உடுத்திய மகாலட்சுமி

பச்சை பட்டு உடுத்திய மகாலட்சுமியின் படத்தை வாசலின் உள்புறம் மாட்டி, தினமும் வணங்கி வந்தால் ஜஸ்வர்யம் பெருகும். செல்வம் அனைத்தும் இல்லம் தேடி வரும்.

செந்தாமரை

வெள்ளிகிழமை சுக்ர ஓரையில், செந்தாமரை இதழை தூவி

மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்.

வெள்ளிக்கிழமை மகிமை

24 வெள்ளிக்கிழமை மனமுருகி மகாலட்சுமியை வழிபட்டால் பணம் இல்லம் தேடி வரும்.

வெள்ளிக்கிழமைகளில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு  நைவேத்யமாக படைத்து, அதனை குடும்ப உறுப்பினர் மட்டும் சாப்பிட்டு வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும்.

நெல்லி மரம்

வீட்டின் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

மஞ்சள்

மஞ்சளை நீரில் கலந்து வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் தெளித்தால் ஜஸ்வர்யம் பெருகும்.

ஐப்பசி மாதம் வளர்பிறை நாளில் மகாலட்சுமியை வழிப்பட்டு வந்தால் இரட்டிப்பு நன்மை பெருகும்.

Share this post

1 thought on “மகா லட்சுமி அருளால் செல்வம் பெருக இதை செய்யுங்கள் போதும்…”

  1. Pingback: மறந்தும் கூட மாலை நேரத்தில் இதை செய்யாதீங்க-Malai nerathil seya kudathavai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top