கண்புரை வராமல் தடுக்க செய்ய வேண்டியது – கண்புரை பாட்டி வைத்தியம்

கண்புரை பாட்டி வைத்தியம்

கண்புரை பாட்டி வைத்தியம் – கண்ண சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், கண்ணில் பல வகையான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கண்புரையானது முதுமையானது காரணமாக பெரும்பாலும் வர வாய்ப்புண்டு.முதுமையின் காரணமாக கண்ணில் உள்ள செல்கள் வலு இழக்கின்றன. அதனால், கண்புரையானது வருகிறது.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே கண்புரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து குறைப்பாட்டால் கண்புரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்துகாட்டாக, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நீர் இழப்பு காலங்களில் கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடலில் நீர் இழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நுணுக்கமான வேலை செய்பவராக இருந்தாலும், அதிகம் எழுத, படிக்கக்கூடியவராக இருந்தாலும் கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரம்பகால கண்புரையை கண்ணாடி அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும்.

கண்புரை முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.

கண்புரை வராமல் தடுக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் சாப்பிட வேண்டும். பச்சைப்பயிறு, வேர்க்கடலை, கம்பு, கோதுமை, உளுந்து, முளைகட்டிய தானியங்களை சாப்பிட  வேண்டும்.

பழங்களில் நெல்லிக்கனி, கொய்யா, பப்பாளிப்பழம், அன்னாச்சி, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வாழை முதலிய பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அவசியம்.

காய்கறிகளில் கேரட், முட்டைக்கோஸ்,முள்ளங்கி, புடலை, பீர்க்கங்காய், வெங்காயம், அவரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது அவசியம்.

கீரைகளில் பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை முதலியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே

அதிகாலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்த்தால் போதும் நன்மை பெருகும்-Athikalai velaiyil parkka vendiyathu

புற்றுநோயை விரட்டி அடிக்கும் மணத்தக்காளி கீரை- Manathakkali Keerai Benefits

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top