இளநரை இனி வரவே வராது – Narai Mudi Karupaga Tips in Tamil

இளநரை

Narai Mudi Karupaga Tips in Tamil- இளநரைநம் முகத்திற்கு அழகு சேர்ப்பது தலையில் கரு கரு என அடர்த்தியாக வளரும் முடியே. ஆனால், இன்று சிறு வயதிலே முடிகள் நரைத்து இள நரையானது வளர்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். இள நரையானது நமது அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த இள நரையைப் போக்க எவ்வளவோ காசை செலவு செய்தும் பயன் இல்லையா? இனி பணத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இள நரையை நீக்கலாம்.

இள நரை வருவதற்கான காரணங்கள்…

அதிகளவு வெயிலில் அலைவதினாலும், காற்று மாசுபாடு உள்ள இடத்தில் அதிக நேரம் நிற்பதாலும், மன அழுத்தம் ஆகியவற்றாலும் இளநரையானது வருகிறது. இளநரை ஏற்பட காரணம்? என்ன என்று புலம்பும் மக்களே! தோலில் உள்ள, ‘மெலனோசைட்ஸ்’ என்ற நிறமி தான், தலை முடி மற்றும் தோலுக்கு நிறம் தருகிறது. இந்த நிறமியின் உற்பத்தி குறைய தொடங்கினால், தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். மரபியல் காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதால், இளநரை ஏற்படுகிறது.

இள நரையைப் போக்கும் வழிமுறைகள் – Narai mudi karupaga tips in tamil

இளநரை

Narai mudi karupaga tips in tamil- பாதாம் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எலுமிச்சை சாறைக் கலந்துக்கொள்ளவும். இதனை, தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலைக்கு குளித்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- நெல்லிக்காய் பொடி

தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, செம்பருத்தி பொடி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கருப்பு எள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். காய்ச்சிய எண்ணெயை வடிகட்டி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர், தலைக்குக் குளித்து வந்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி பொடியை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு  கட்ட வேண்டும். கட்டிய இந்த மூட்டையை தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்தால், எண்ணெயானது கருப்பு நிறமாக மாறும். இந்த எண்ணெயைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரையானது நீங்கும்.

கரிசலாங்கண்ணி கீரையை அரைத்துக்கொள்ளவும். அதனை, எண்ணெயில் காய்ச்ச வேண்டும். அது ஆறியவுடன் தலைக்குத் தேய்த்து வந்தால் இளநரையானது குணமாகும்.

Narai mudi karupaga tips in tamil- காபி தூள்

இளநரை

சிறிதளவு காபி தூள் மற்றும் டீ தூளை அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தேங்காய் எண்ணெயில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறைப் பிழிந்துவிடவும். இதனை டபுள் பாய்லிங் முறையில் சூடேற்ற வேண்டும். பின்பு இதனை வடிகட்டி ஆற வைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- இளநீர்

கரிசலாங்கண்ணி இலையைக் காய வைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனை இளநீர் மற்றும் தேனுடன் கலந்து குடித்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- கருவேப்பிலை

தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையைப் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். பின்பு இதனை ஆற வைத்து தலையில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- மருதாணி இலை

மருதாணி இலையை அரைத்துக்கொள்ளவும். அதனை எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு இதனை ஆற வைத்து தலையில் தடவி வந்தால் இளநரையானது நீங்கும்.

Narai mudi karupaga tips in tamil- நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் சாப்பிடுவன் மூலம் முடி நன்றாக வளரும். இளநரையானது குணமாகும்.

Narai mudi karupaga tips in tamil- எண்ணெய்

தலைமுடிக்கு தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். முடியை நன்றாக பராமரித்து வந்தால் இளநரை நம்மை நெருங்கவே நெருங்காது. வாரம் இருமுறை தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளித்து வந்தாலும், முடி ஆரோக்கியமாக இருக்கும். இளநரை வருவதற்கான வாய்ப்பும் குறையும்.

தாடி மீசை நரை நீங்க

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, நெல்லிக்காய் பொடி இரண்டையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர், இதனை நரைத்த மீசையிலும் தாடியிலும் தடவ வேண்டும். லேசாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தாடி மீசையில் உள்ள நரை நீங்கும்.

மருதாணி பொடியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து 1 நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பார்த்தால் மருதாணி பேஸ்ட் கருப்பாக இருக்கும். நீங்கள் இரவு கலந்து வைக்கும் போது பச்சை நிறமாக இருக்கும். இதனை, தாடி மீசையில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தாடி மீசையில் உள்ள நரை நீங்கும்.

இதையும் படிக்கலாமே –

1.ஈறு வீக்கத்திற்கான காரணம் – ஈறு வீக்கத்திற்கான பாட்டி வைத்தியம

Share this post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top